Last Updated : 09 Sep, 2016 10:19 AM

 

Published : 09 Sep 2016 10:19 AM
Last Updated : 09 Sep 2016 10:19 AM

ஜிஎஸ்டியால் பணவீக்கம் அதிகரிக்காது: அரவிந்த் பனகாரியா தகவல்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பால் பணவீக்கம் அதிகரிக்கும் என்று அச்சப்படத் தேவையில்லை. பணவீக்கத்துக்கு இணக்கமான சூழலே இருக்கும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் பனகாரியா குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று பேசிய அவர், ஜிஎஸ்டி விகிதம் குறைவாகவே இருக்கும் என்றும், இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் என்று அச்சப்படத் தேவையில்லை, பணவீக்கத்தை குறைப்பதற்கு உதவும் விதமாகவே வரி விகிதம் இருக்கும் என்றார்.

ஜிஎஸ்டி விகிதத்தை முடிவு செய்வதற்கு முன்னர் பல்வேறு கோணங்களிலும் ஆலோசிக்கப் பட்டது. சமரசமான திருப்திகரமான சூழலுக்கு பின்னரே முடிவு எட்டப்பட்டது. ஆனால் அதிக வரி விகிதத்தைக் காட்டிலும் மிகச் சிறப்பான குறைவான வரி விகிதமாக இருக்கும் என்றும் கூறினார்.

எல்லாவற்றும் சமநிலையான முக்கியத்துவம் கொடுக்கப்பட் டுள்ளதாக நான் நினைக்கிறேன், குறைவான வரி விகிதம் பணவீக்கத்தை குறைப்பதற்கு உதவும் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த மாதத்தில் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி மசோதாவுக்கு நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக ஜிஎஸ்டி விகிதத்தை தீர்மானிக்கும் குழுவுக்கு மத்திய அரசு விரைவில் அறிவிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி விரைவில் ஜிஎஸ்டி விகிதம் அறிவிக்கப்படலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x