புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை: சக்திகாந்த தாஸ் திட்டவட்டம்

புதிய 1,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை: சக்திகாந்த தாஸ் திட்டவட்டம்
Updated on
1 min read

புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்ட இல்லை என்று மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 8-ம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், புதிய 1000 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

இதுகுறித்து சக்திகாந்த தாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:

புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை. அதேநேரம், புதிய 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை கூடுதலாக அச்சடித்து விநியோகிக்க அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

ஏடிஎம்-களில் போதுமான அளவுக்கு பணம் கிடைக்கவில்லை என்ற புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்புவதில் ஏற்பட்ட சிக்கல்களும் தீர்க்கப்பட்டு, இப்போது அடிக்கடி பணம் எடுத்துக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் சிலர் தேவைக்கு அதிகமாக பணம் எடுத்துக்கொள்வதால் மற்ற வர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பணத்தை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இப்போது பணத் தட்டுப்பாடு நீங்கி இயல்பு நிலை திரும்பி வருவதாகவும், பண விநியோ கத்தை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருவதாகவும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியும் கடந்த வாரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in