Published : 31 Aug 2016 10:40 AM
Last Updated : 31 Aug 2016 10:40 AM

மைக்ரோ பைனான்ஸ் துறையில் முதலீடு செய்யும் ரத்தன் டாடா, நந்தன் நிலகேணி மற்றும் விஜய் கெல்கர்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களாக ரத்தன் டாடா, நந்தன் நிலகேணி மற்றும் விஜய் கெல்கர் மூவரும் இணைந்து மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் தொடங்குகின்றனர். பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு எளிதாகக் கடனுதவி கிடைக்கச் செய்யும் வகையில் இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் இருக்கும் என்று டாடா டிரஸ்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவந்தி பைனான்ஸ்

புதிய நிறுவனத்துக்கு அவந்தி பைனான்ஸ் என பெயரிட்டுள்ளனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நிதிச் சேவைகளை ஏழை மக்களுக்குக் கொண்டு செல்லும் விதமாக இந்த நிறுவனம் இருக் கும். இந்தியாவில் பொருளாதார வாய்ப்பற்றவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங் கியவர்களுக்கு கடனுதவி அளிப் பதற்கு முன்னுரிமை கொடுக்கும் என்று டாடா டிரஸ்ட் கூறியுள்ளது. இதற்காக அவந்தி பைனான்ஸ் நிறுவனம் ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிக்க உள்ளது. நிறுவனம் தனது செயல்பாடுகளை நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறப்பணி

ரத்தன் டாடா மற்றும் நிலகேணி இருவரும் முதலீட்டை கொடையாக அளித்து இந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தை தொடங்குகின்றனர். மேலும் இவர்களுடன் முன்னாள் நிதிச் செயலாளராக இருந்த விஜய் கெல்கரும் இணைகிறார். அவந்தி நிறுவனத்திலிருந்து கிடைக்கும் லாபம் மீண்டும் அறப்பணிகளுக்கே செலவிடப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திரு தோராப்ஜி டாடா டிரஸ்ட்டின் தற்போதைய நிர்வாக டிரஸ்டியாக உள்ள ஆர். வெங்கடரமணனும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்கிறார். இது குறித்த மேலும் விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

டாடா குழும பொறுப்பு களிலிருந்து ரத்தன் டாடா 2012-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். அதற்கு பிறகு தனது தனிப்பட்ட முதலீடாக பல தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். முக்கியமாக ஸ்நாப்டீல், அர்பன் லேடர், ஓலா மற்றும் பல நிறுவனங்களில் முதலீடுகளை செய்துள்ளார்.

இது குறித்து நந்தன் நிலகேணி கருத்து எதையும் தெரிவிக்க வில்லை. ஆனால் பெயர் குறிப்பிட விரும்பாத, இந்த நிறுவனத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட ஒருவர் கூறும்போது. இந்த நிறுவனத்தின் முக்கிய செயல்பாடாக மைக்ரோ பைனான்ஸ் இருக்கும். குறிப்பாக பொருளாதாரத்தில் அடிநிலையில் உள்ள மக்களுக்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறு கடன்களை வழங்குவதற்கான திட்டமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தில் பின்தங்கி யவர்களை மேம்படுத்தும் திட்டங் களை டாடா டிரஸ்ட் தனது இலக் காக வைத்துள்ளது. இதைப்போல சிந்தனைக் கொண்டவர்களோடு இணைந்து செயல்படவும், சிறந்த வங்கிச் சேவையை வழங்கும் விதமாகவும் இருக்கும். நலிவடைந் தவர்களது பொருளாதார தேவை களுக்கு ஏற்ற வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு கள் படி குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய் சொந்த முதலீட்டை வைத்திருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x