Last Updated : 03 Jun, 2017 09:33 PM

 

Published : 03 Jun 2017 09:33 PM
Last Updated : 03 Jun 2017 09:33 PM

ஜிஎஸ்டி-யின் கீழ் தங்கத்திற்கு 3% வரி; ரூ.500க்கும் குறைவான காலணிகளுக்கு 5% வரி

புதிய ஜிஎஸ்டி வரித்திட்டத்தின் படி ரூ.500க்கும் குறைவான காலணிகளுக்கு 5% வரி விதிக்கப்படும். மற்ற காலணிகளுக்கு 18% வரி விதிக்கப்படும்.

அதே போல் தங்கத்திற்கு புதிய ஜிஎஸ்டியின் படி 3% வரியும் தங்க பிஸ்கட்டுகளுக்கு 18% வரியும் விதிக்கப்படும்.

தற்போதைய நிலவரங்களின் படி ரூ.500-1000 விலைகளில் உள்ள காலணிகளுக்கு 6% எக்சைஸ் டூட்டி உள்ளது. மாநிலங்களும் வாட் வரி விதிக்கும்.

ஆயத்த ஆடைகளுக்கு புதிய ஜிஎஸ்டியின் படி 12% வரியும் பருத்தித் துணிக்கு 5% வரி. பீடிகளுக்கு 28% வரி முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி ஜூலை 1-ம் தேதி முதல் நாடுமுழுடும் அமலாகிறது. நாடு முழுதும் இருந்து வரும் 16 வேறுபட்ட வரிகளை ஒன்றிணைத்து இந்தியாவை சிங்கிள் மார்க்கெட்டாக ஆக்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x