Published : 25 Oct 2013 09:43 AM
Last Updated : 25 Oct 2013 09:43 AM

இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் குறைந்தது

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் குறைந்து 61.53 ஆக வர்த்தகமாகியிருந்தது.

நேற்று மாலை வர்த்தக நேர முடிவின் போது, இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 61.46 என்ற நிலையில் இருந்தது.

வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் மத்தியில் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதாலும் சர்வதேச நாடுகளில் அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்துள்ளதாலும் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x