

ஏர்செல் நிறுவனத்துடனான ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டும் என எதிர்பார்க்கிறோம். மேலும் புரூக்பீல்டு நிறுவனத்துடனான ஒப்பந்தம் வரும் செப்டம்பர் மாதத் துக்குள் இறுதி நிலையை எட்டும். இந்த ஒப்பந்தங்களின் மூலம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறு வனத்தின் கடன் ரூ.45,000 கோடியி லிருந்து ரூ.20,000 கோடியாக குறை யும் என நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி தெரிவித்துள் ளார்.
நிறுவனத்தின் கடன் அதிகரிப் பது தொடர்பாக முதலீட்டாளர் களிடையே அதிருப்தி நிலவியதை அடுத்து நிறுவனத்தின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து பத்திரிகையாளர்களிடம் நேற்று அனில் அம்பானி விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது: நிறுவனத்தின் மாற்றங்கள் தொடர்பான உத்திகளை கடன் வழங்கிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆர்காம் நிறுவனத்துக்கு மூடி’ஸ் வழங்கிய தரமதிப்பீடு வருத்தமளிக்கிறது. எங்களுடைய தரமதிப்பீட்டை விரைவில் உயர்த்துவோம். ஆர்காம் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கும் புதிய நிறுவனம் ஏர்காம் என்று அழைக்கப்படும்.
‘‘தொலைத்தொடர்பு துறையில் நிலவி வரும் நிலையில்லா தன்மை யால் நடப்பு நிதியாண்டில் கிட்டத் தட்ட 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வேலை இழப்புகள் ஏற்படும். மேலும் நிறுவனத்தின் கடன்களை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’’ என்று ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் தலைவர் புனித் கார்க் தெரிவித்தார்.