

வோடபோன் நிறுவனத்தில் முத லீடு செய்யும் திட்டம் ஏதும் இல்லை என ஜப்பானைச் சேர்ந்த சாப்ட்பேங்க் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக வந்த செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என சாப்ட்பேங்க் விளக்கம் அளித்திருக்கிறது.
வோடபோன் இந்தியா நிறுவ னமும் பிர்லா குழுமத்தை சேர்ந்த ஐடியா செல்லுலார் நிறுவனமும் இணைவது குறித்த பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் சில நாட் களுக்கு முன்பு வோடபோன் இந்தியாவில் கணிசமாக பங்குகளை வாங்க சாப்ட் பேங்க் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங் கள் இணைந்த பிறகு புதிய நிறுவனத்தில் 20 சதவீத பங்குகள் வாங்க திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியானது.
ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது. இது தொடர் பான எந்தவிதமான பேச்சு வார்த் தையிலும் நாங்கள் ஈடுபடவில்லை என சாப்ட் பேங்க் விளக்கம் அளித்துள்ளது.