

நிறுவனங்கள் தொழில் தொடங் குவதை எளிதாக்க ஒரே நாளில் நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் வரி பிடித்தம் செய்யும் கணக்கு எண் (டான்) ஆகியவற்றை வழங்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக நிறுவ னங்கள் விவகாரத்துறை அமைச் சகத்துடன் (எம்சிஏ) இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளதாக மத்திய வரி விதிப்பு வாரி யம் (சிபிடிடி) தெரிவித் துள்ளது.
இத்தகைய எண்களைப் பெற விரும்பும் நிறுவனங்கள் பொதுவான விண்ணப்பப் படிவத்தை (ஐஎன்சி 32) பூர்த்தி செய்து அனுப்பினாலே சிபிடிடி இதற்கான எண்களை ஒரே நாளில் அளித்துவிடும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்துடன் முடி வடைந்த கடந்த நிதி ஆண்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட 19,704 நிறுவனங்களுக்கு இதேபோல பான் எண்கள் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2017-ல் புதிதாக தொடங் கப்பட்ட 10,894 நிறுவனங்களில் 95 சதவீத நிறுவனங்களுக்கு 4 மணி நேரத்துக்கும் குறைவான கால அவகாசத்தில் பான், டான் இரண்டும் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சிய நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்குள்ளாக அளிக்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல 94.7 சதவீத நிறுவ னங்களுக்கு டான் எண்கள் நான்கு மணி நேரத்துக்குள்ளாகவும் எஞ்சிய நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்குள்ளாகவும் அளிக்கப் பட்டுவிட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மின்னணு முறையிலான எண் கள் (இ-பான்) தனி நபர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப தாரர்கள் மின்னணு முறையில் கையெழுத்திட்டு அனுப்பினால் இத்தகைய அட்டைகள் அளிக்கப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.