பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்கும் இந்த வார வர்த்தகத்தில் சந்தை வல்லுநர்கள் கணிப்பு

பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம் இருக்கும் இந்த வார வர்த்தகத்தில் சந்தை வல்லுநர்கள் கணிப்பு
Updated on
1 min read

இந்த வாரம் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கமான வர்த்தகம் இருக்கக் கூடும் என பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றது, நிறுவனங் களின் காலாண்டு முடிவுகள், பட்ஜெட் எதிர்பார்ப்பு உள்ளிட்ட காரணங்களால் வரும் வாரத்தில் ஏற்ற இறக்கம் நிலவும். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரத் தில் உரையாற்றினார். இன்றைய வர்த்தகத்தில் அவர் பேசியதன் அடிப்படையில் சர்வதேச அளவில் பங்குச்சந்தை வர்த்தகம் இருக்கும்.

புதிதாக பொறுப்பேற்றிக்கும் ட்ரம்ப் எதுபோன்ற கொள்கை முடிவுகளை எடுப்பார் என்பதை சர்வதேச முதலீட்டாளர்கள் கவனித்து வருவதாக கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு துணைத்தலைவர் சஞ்சீவ் ஜார்படே தெரிவித்தார்.

அமெரிக்க பொருட்களை வாங்குங்கள், அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள் என் னும் கொள்கை சர்வதேச பொருளா தாரத்துக்கு நல்லதல்ல. ட்ரம்பின் இந்த கருத்து பங்குச்சந்தையில் சரிவை உருவாக்கலாம் என ஜியோஜித் பிஎன்பி பரிபா நிறு வனத்தின் வல்லுநர் வி.கே.விஜய குமார் தெரிவித்தார்.

மேலும் ஹிந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்டிஎப்சி, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வர இருக்கின்றன. இந்த முடிவுகளும் சந்தையின் போக்கினைத் தீர்மானிக்கும்.

எப் அண்ட் ஓ முடிவுகள் இந்த வாரம் இருப்பதாலும் ஏற்ற இறக்கமான வர்த்தகம் இருக்கும். பி-நோட் விதிமுறைகளை மேலும் கடுமையாக்குவதாக செபி அறிவித்திருக்கிறது. இந்த செய்தியும் முதலீட்டாள்ர்களுக்கு சாதகமானது அல்ல. பட்ஜெட் வரை சந்தையின் போக்கு தீர்மானிக்க முடியாததாக இருக்கும். அதுவரை ஏற்றம் வர வாய்ப்பு இல்லை. பட்ஜெட் அறிவிப்புகளைப் பொருத்து சந்தையின் அடுத்தகட்டப் போக்கு தெரியவரும் என சாம்கோ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஜிமீட் மோடி தெரிவித்தார்.

ரூ.5,100 கோடி அந்நிய முதலீடு வெளியேறியது

நடப்பு ஜனவரி மாதத்தில் இது வரை ரூ.5,100 கோடி அளவுக்கு அந்நிய முதலீடு இந்திய சந்தையில் இருந்து வெளியேறியிருக்கிறது. பங்குச்சந்தையில் இருந்து ரூ.3,255 கோடியும், கடன் சந்தையில் இருந்து ரூ.1,890 கோடியும் (ஜனவரி 20 வரை) வெளியேறி இருக்கிறது. பணமதிப்பு நீக்கம், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் அந்நிய முதலீடு வெளியேறி வருகிறது. அடுத்த இரு காலாண்டுகளிலும் இதே நிலைமை நீடிக்கும். நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதிக்குப் பிறகுதான் அந்நிய முதலீடு மீண்டும் வருவதற்கான சூழல் இருக்கிறது என பங்குச்சந்தை வல்லுநர் தினேஷ் ரோஹிரா தெரிவித்தார்.

கடந்த வாரம் சென்செக்ஸ் 204 புள்ளிகளும், நிப்டி 51 புள்ளிகளும் சரிந்து முடிந்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in