Published : 22 Jun 2017 10:03 AM
Last Updated : 22 Jun 2017 10:03 AM

‘க்ளிக்’ ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது ஹோண்டா

இரு சக்கர வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹோண்டா நிறுவனம் கிராமபுறத் தேவையை பூர்த்தி செய்யும் வகை யில் `க்ளிக்’ என்ற பெயரிலான ஸ்கூட்டரை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் விலை ரூ.42,499. (புதுடெல்லி விற்பனையக விலை).

நாட்டின் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் 10-ல் ஆறு ஸ்கூட்டர்கள் 100 முதல் 110 சிசி பிரிவில் விற்பனையாகின்றன. இந்த பிரிவில் கியர் இல்லாத ஸ்கூட்டர்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது என நிறுவனத் தலைவர் மினோரு கட்டோ கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வால் மாவட்டத்தில் உள்ள தபுகரா ஆலையில் இந்த ஸ்கூட்டர் தயாராகிறது. முதலில் ராஜஸ்தான் மாநிலத்தில் விற்பனையாகும் இந்த ஸ்கூட்டர் பிறகு படிப்படி யாக இந்தியா முழுவதும் விற் பனையாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

அதிகபட்சம் மணிக்கு 83 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும். எரிபொருள் கொள்ளளவு 5.3 லிட்டர். இந்த வாகனத்தின் எடை 102 கிலோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x