

காக்னிஸண்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் துணைத்தலைவர் லக்ஷ்மி நாராயணனை இந்து குழுமத்தின் ஆன்லைன் ரியல் எஸ்டேட் நிறுவனமான ரூப் அண்ட் புளோர் டாட் காம் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பொறுப்புகள் அல்லாத இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்ஷ்மி நாராயணன் மிகுந்த நிர்வாகத் திறமை கொண் டவர் என்பதால் ரூப் அண்ட் புளோர் நிறுவனத்தை இந்தியா வின் முன்னணி நிறுவனமாக மாற்றுவார் என்று இயக்குநர் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராஜிவ் லோச்சன், கஸ்தூரி அண்ட் சன்ஸ் இயக்குநர்கள் கே.பாலாஜி மற்றும் கே.வேணுகோபால் ஆகியோர் ரூப் அண்ட் புளோர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் உள்ளனர்.
சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் லக்ஷ்மி நாராயணன் 25 வருடங்கள் அனுபவம் கொண்டவர். மேலும் காக்னிஸண்ட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவை வளர்த்ததில் மிக முக்கிய பங்கு வகித்தவர்.
இந்த நியமனம் குறித்து லக்ஷ்மி நாராயணன் கூறியதாவது: கேஎஸ்எல் மீடியா நிறுவனத்தோடு இணைந் தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி யடைகிறேன். இந்த நிறுவனம் மீடியா தொழிலிலிருந்து டிஜிட்டலை நோக்கி மிகுந்த உத்திகளோடு பயணிக்கிறது. இதற்கு சிறந்த உதாரணம் ரூப் அண்ட் புளோர். இந்த நிறுவனம் பாரம்பரியமான ரியல் எஸ்டேட் விளம்பரங்களோடு டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் இணைத்து முன்னேற்றம் செய்து வருகிறது. இது வீடு வாங்குபவர்களுக்கு புதிய அனுபவத்தை தருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இணைந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவது குறித்து நான் ஆவலோடு இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.