Last Updated : 11 Jun, 2017 12:59 PM

 

Published : 11 Jun 2017 12:59 PM
Last Updated : 11 Jun 2017 12:59 PM

தனியார்மயமாக்கம் இறுதி செய்த பிறகே புது விமானங்கள் வாங்க முடிவு: ஏர் இந்தியா தலைவர் அஸ்வினி லோகானி உறுதி

புது விமானங்கள் வாங்குவதற் கான திட்டம் எதுவும் தற்போது இல்லை என பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா கூறியுள்ளது. தனியார் மயமாக்கம் குறித்து இறுதி செய்யப்பட்ட பிறகே இது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்கு நருமான அஸ்வினி லோகானி செய்தியாளர்களிடம் கூறிய தாவது;

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு புதிய விமானங்கள் வாங்கு வதற்கு தற்போது எந்த முடிவுகளும் எடுக்கப்படாது. தனியார்மயமாக்கும் வாய்ப்புகள் இறுதி செய்யப்பட்ட பிறகே, எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்த முடியும் என்று கூறியுள்ளார். எனினும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்படி புதிய விமானங்கள் வாங்கப்படும்.

புதிய விமானங்களை வாங்கு வதற்கான பேச்சு வார்த்தைகள் நீண்ட காலம் எடுக்கக்கூடியது. சாதாரணமாக 6 முதல் 9 மாதங்கள் வரை இதற்கான பேச்சுவார்த்தை நடக்கும். எனவே தற்போது இருக்கும் விமானங்களைக் கொண்டே நிறுவனம் இயங்கும். எவ்வளவு நாட்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளாமல் இருப்போம் என்பதை உடனடியாகச் சொல்ல முடியாது. இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை.

விமானங்கள் வாங்குவதற் காக ஏற்கெனவே அளிக்கப்பட்ட ஆர்டர்களில் எந்த மாற்றமும் இல்லை. அந்த விமானங்கள் விரைவில் வர உள்ளன என்றும் கூறினார். மேலும் பழைய ஆர்டர்களின்படி ஏர் இந்தியா வாங்க உள்ள விமானங்களின் பட்டியலையும் குறிப்பிட்டார்.

10 ஏடிஆர் விமானங்கள், 29 ஏர் பஸ் விமானங்களும் புதிதாக சேர்க்கப்பட உள்ளன. இவை விரைவில் செயல்பாட்டுக்கு வரும். ஏற்கெனவே நிறுவனத்தி டம் பழைய விமானங்கள் அதிகமாக உள்ளன. இவற்றில் பலவும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பழைய விமானங்களில் 15 ஏர்பஸ் விமானங்களே செயலில் இருக்கும். அடுத்த 6 முதல் 7 மாதங்களில் 7 போயிங் விமானங்களை வாங்குகிறோம். இதன் மூலம் சர்வதேச விமானங் களை அதிகமாக இயக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

ஏர் இந்தியா நிறுவனத்திடம் தற்போது 103 விமானங்கள் உள்ளன. அதில் போயிங் 777எஸ், 747எஸ் மற்றும் 787எஸ் வகை விமானங்கள் 42 உள்ளன. ஏர்பஸ் நிறுவனத்தின் 319 எஸ், 320எஸ், 321எஸ் வகை விமானங்கள் 61 உள்ளன.

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்குவது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார். விமான போக்குவரத்து அமைச்சகமும் ஏர் இந்தியா நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக வாய்ப்பு களை ஆராய்ந்து வருகிறது. தனியார்மயமாக்கும் வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்படும் என்று விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் ஜெயந்த சின்ஹா குறிபிட்டிருந்தார்.

விமான பராமரிப்பு மற்றும் விமான குத்தகைக் கட்டணங்க ளால் நிறுவனத்தின் கடன் ரூ.50,000 கோடிக்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் எரிபொருள் கட்டணங் கள் குறைந்ததால் நிறுவனம் 2015 -16 நிதியாண்டில் ரூ.105 கோடி செயல்பாட்டு லாபம் ஈட்டியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x