

பொருளாதார விவகாரத்துறைச் செயலர் ராஜீவ் மெஹரிஷி நேற்று நிதித்துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை நியமன குழு இவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளித் துள்ளது.
1978-ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த ராஜீவ் மெஹரிஷி ராஜஸ்தான் மாநிலத்தவர். கடந்த மாதம்தான் இவர் பொருளாதார விவகாரத்துறைச் செயலராக நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே இப்பதவியிலிருந்த அர்விந்த் மாயாராமுக்குப் பதிலாக இவர் அப்பொறுப்பை ஏற்றார்.
நிதித்துறையில் உள்ள மற்ற நான்கு செயலாளர்களில் இவர் பதவியில் மூத்தவராவார். நிதித்துறையில் செலவு, வருவாய் நிதிச்சேவை மற்றும் பங்கு விலக்கல் துறைக்கு செயலர்கள் உள்ளனர். இவர் களில் பணிமூப்பு அடிப்படையில் மூத்த வரான ராஜீவ் மெஹரிஷி நிதித்துறைச் செயலராக நியமிக் கப்பட்டுள்ளார்.