Last Updated : 21 Aug, 2016 01:19 PM

 

Published : 21 Aug 2016 01:19 PM
Last Updated : 21 Aug 2016 01:19 PM

ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்க திட்டம்: அதானி குழுமத்துக்கு சாதகமான தீர்ப்பு

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லாந்து மாகாணத்தில் அதானி குழுமம் மேற்கொள்ள உள்ள சார்மி கோல் நிலக்கரி சுரங்கத் திட்டம் தொடர்பான வழக்கில் உள்ளூர் மக்களின் மனுவை ஆஸ்திரேலிய நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

கடந்த வெள்ளியன்று பிறப் பிக்கப்பட்ட இந்த உத்தரவு பல்வேறு தடைகளை சந்தித்து வரும் அதானி சுரங்கத் திட்டத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:

அதானி குழுமம் 2,100 கோடி டாலர் மதிப்பிலான சார்மிகோல் நிலக்கரி சுரங்க திட்டப் பணியை இங்கு மேற்கொள்ள உள்ளது.

குயின்ஸ்லாந்து பகுதியில் வாழும் சுயேச்சையான வான்கன் மற்றும் ஜகலிங்கோ சமூகத்தைச் சேர்ந்த அமைப்பினர் இத்திட்டப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். ஆனால் குயின்ஸ்லாந்து பெடரல் நீதிமன்றம் இந்த மனுவை நிராகரித்துவிட்டது. இந்த மனுவை ஏற்பதற்கு போதிய முகாந்திரம் இல்லை என்று நீதிபதி ஜான் ரீவ்ஸ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுவிட்டார்.

இந்த சமூகத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர் ஜே அட்ரியன் புர்ராகுபா இது தொடர்பாக குயின்ஸ் லாந்து அரசாங்கம் எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள் ளார்.

குயின்ஸ்லாந்து அரசு, அதானி மற்றும் தேசிய சொந்த தலைப்பு தீர்ப்பாயம் (என்என்டிடி) ஆகியவற்றுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சுரங்கத் திட்டத்தை செயல் படுத்துவதால் இந்திய நிறுவனம் குறிப்பிடுவதைப் போல பொரு ளாதார வளர்ச்சி, வருமானம் இருக்காது என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுரங்க குத்தகை விடும்போதே என்என்டிடி இயற்கை சார்ந்த விதிமுறைகளை பின்பற்றியுள்ளது. அது தனது வரம்புக்குட்பட்டு செயல்பட்டுள்ளது. இதில் எவ்வித விதி மீறலும் இல்லை என்று நீதிபதி ரீவ்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பை அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி வரவேற்றுள்ளார். இந்த சுரங்கத் திட்டப் பணியின் பொருளாதார பலன்கள் இப்பகுதியில் வாழும் வான்கன் மற்றும் ஜகலிங்கோ சமூகத்தினருக்கு நிச்சயம் கிடைக்க நிறுவனம் தொடர்ந்து பாடுபடும் என்று அதானி குறிப் பிட்டுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளாக குயின்ஸ் லாந்து பகுதியில் வாழும் பாரம் பரிய உரிமையாளர்களுடன் இணைந்து சுரங்கம், ரயில் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட திட்டப் பணி களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் இத்திட்டப் பணிக்கு தொடர்ந்து புர்ராகுபா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இருப்பினும் இப்பகுதியில் பெரும் பான்மையான சமூகத்தினர் இத்திட் டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று அதானி குழுமம் வெளி யிட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த திட்டத்தை மேற்கொள்வ தற்காக சட்ட ரீதியாக பல்வேறு இடையூறுகளை நிறுவனம் சந்தித்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் தனியார் அமைப்புகளின் செயல் பாடு மிகவும் வலுவானது. அத்து டன் பெடரல் அனுமதி பெறு வதும் சிரமம். இருப்பினும் அனைத்து இடையூறுகளையும் கடந்து குயின்ஸ்லாந்து பகுதி பொரு ளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை அளிப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து நிறுவனம் செயல்படுத்த உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

அதேசமயம் புர்ரகுபா தொடர்ந்து இதை எதிர்க்கப் போவ தாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்ட ரீதியாக மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தத் திட்டப் பணியானது 6 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. நீதி மன்ற தடை காரணமாக இதை செயல்படுத்துவதில் பல்வேறு இடையூறுகள் தொடர்கின்றன.

2015 ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் சுற்றுச் சூழலைக் காரணம் காட்டி இத்திட்டப் பணிக்கு அனுமதி மறுத்தது. ஆனால் அடுத்த இரண்டு மாதங்களிலேயே ஆஸ்திரேலிய அரசு இத்திட்டப் பணிக்கு ஒப்புதல் வழங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x