

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 90 பைசா உயர்ந்து, ரூ.62.58 ஆக அதிகரித்தது. இது, கடந்த நான்கு வார காலத்தில் புதிய உச்சமாகும்.
அன்னிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வெள்ளிக்கிழமை மாலை வர்த்தகம் முடிவடையும்போது ரூ.63.48 ஆக இருந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவால், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 293 புள்ளிகள் உயர்ந்து, 20,026 ஆக இருந்தது. இது, 1.49 சதவீத உயர்வாகும்.