

ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி. 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
இதே நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.
1999-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் நிதிப் பிரிவின் இயக்குநர் பொறுப்பில் இருந்தவர்.
நிக்கோலஸ் பிரமல் நிறுவனத்தின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் நிரந்தர இயக்குநர் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்திய நிறுவனங்கள் செயலாளர் கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்று உறுப்பினராக இருந்து வருகிறார்.
பட்டயக் கணக்காளர் படிப்பை முடித்தவர். தொழில் நிதி தொடர்பாக டிப்ளமோ படிப்பை படித்தவர்.
ஆந்திரா வங்கி, விஎஸ்டி இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஸ்டீல் ஆகிய நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.