

சூரிய மின்சக்தி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மிகப் பெரிய சூரிய மின்சக்தி திட்டங்கள் ஆகியவற்றுக்கான திறனை 20,000 மெகாவாட்டிலிருந்து 40,000 மெகாவாட்டாக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
சூரிய சக்திப் பூங்காக்களும், மிகப் பெரியசூரிய ஒளி மின்சக்தி திட்டங்களும் மத்திய அரசின் நிதி உதவியுடன் ரூ.8100 கோடி மதிப்பீட்டில் 2019-20 ம் ஆண்டுக்குள் அமைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டங்கள் செயல்படத் தொடங்கும் நிலையில் ஆண்டொன்றுக்கு 6,400 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் காரணமாக மின் உற்பத்தி சாதனங்களால் ஆண்டுக்கு 5 கோடியே 50 லட்சம் டன் கரியமில வாயு வெளியிடுவது தவிர்க்கப்படும்.
மேலும் கார்பன் வெளியீடுகளைக் குறைத்து அதன் மூலம் நிலையான சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வளர்ச்சிக்கு இந்த திட்டம் வழி வகுக்கும்.