Last Updated : 04 Sep, 2016 11:31 AM

 

Published : 04 Sep 2016 11:31 AM
Last Updated : 04 Sep 2016 11:31 AM

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை உறுதி செய்வது அவசியம்: ரகுராம் ராஜன் பேச்சு

ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாடுகளை உறுதி செய்வது தான் தற்போதைய தேவையாக உள்ளது என்று ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் கவர்னராக பணிக்காலத்தை நிறைவு செய்யும் ராஜன் இந்த கருத்தை கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் செயல்திறன் குறித்து சொல்ல வேண்டுமென்றால் ஒன்றுமில்லை, அரசின் ஒரு வகையான அமைப்பாகத்தான் இது உள்ளது. இதிலிருந்து நாட்டின் தேவைக்கான பாதுகாப்பு அமைப்பாக வலிமையான சுதந்திரமான அமைப்பாக உருவாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுடெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி விழாவில் ரிசர்வ் வங்கியின் சுதந்திரம் குறித்த தலைப் பில் ரகுராம் ராஜன் உரையாற் றினார். அதில் பேசியதாவது:

ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்படுவதில்லை. அதன் அனைத்து கட்டுப்பாடுகளும் மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது.

இதற்கு முன் ரிசர்வ் வங்கி யின் கவர்னராக இருந்த டி. சுப்பா ராவ் அரசின் கொள்கை வித்தியா சங்கள் குறித்து பேசியதையும் நினை வுபடுத்திய ராஜன், ரிசர்வ் வங் கியின் செயல்திறன் ஏதுமில்லை. அது அரசால் கட்டுப்படுத்தப் படுகிறது என்று அவர் பேசியதைச் சுட்டிக் காட்டினார். எப்போதாவது தான் ரிசர்வ் வங்கி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான நிலைப்பாடை எடுத்துள்ளது.

நிர்வாக ரீதியில் முடிவு எடுக்கும் சுதந்திரம் ரிசர்வ் வங்கிக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் பெரும்பாலான சமயங்களில் அரசின் நிர்வாக அமைப்புகள் ஆர்பிஐ செயல்பாடுகள் குறித்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கின்றன. பல கட்ட பரிசீலனை, அவ்விதம் பரிசீலனை செய்யும் அமைப்புகள் தொழில்நுட்ப ரீதியிலான புரிதல் இல்லாதவையாக இருப்பதால் முடிவு எடுப்பது பாதிப்புக்குள்ளாகிறது.

கடன் கொள்கை உருவாக்கத்துக்கு அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவில் முன்னாள் அரசு அதிகாரிகள், அரசால் நியமிக்கப்படுவோர் இருப்பதால் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் சுதந்திரமானதாக இருக்காது.

இத்தகைய சூழலில் ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகளான பட்ஜெட், லைசென்ஸ் வழங்குவது, கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அரசு ஏற்படுத்திய குழு அல்லது அதன் துணைக் குழுவால் கண்காணிக்கப்படும். ஆர்பிஐ இயக்குநர் குழுவில் பல மாதங்களாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவை உடனடியாக நிரப்பப்பட வேண்டும். அப்போதுதான் நிர்வாகக்குழுவின் முழுமையான செயல்பாடுகள், அணுகுமுறைகள் ஆகியன செயல்பாட்டுக்கு வரும்.

செப்டம்பர் 4-ம் தேதியுடன் ரகுராம் ராஜனின் பதவிக் காலம் முடிவடைகிறது. ஆர்பிஐ கவர்ன ராக பொது நிகழ்ச்சியில் அவர் நிகழ்த்திய கடைசி உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x