

அவென்யூ சூப்பர் மார்ட்ஸ் பங்கு நேற்று தன்னுடைய முதல் நாள் வர்த்தகத்தை தொடங்கியது. 299 ரூபாய்க்கு இந்த பங்குகள் வெளி யிடப்பட்டன. ஆனால் நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 114% உயர்ந்து 641 ரூபாயில் வர்த்தகம் முடிந்தது. வர்த்தகத்தின் இடையே 648.90 ரூபாய் வரை உயர்ந்தது.
சமீபத்தில் இந்த நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு நடைபெற் றது. ரூ.1,870 கோடிக்கு நிதி திரட்டியது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.39,882.21 கோடி யாக இருக்கிறது. சமீபத்தில் வெளி யான பங்குகளில் அதிக மடங்குக்கு பரிந்துரை மற்றும் அதிக சதவீதத் தில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் இதுவாக இருக்கும் என சாம்கோ செக்யூரெட்டீஸ் நிறுவனத்தின் ஜிமீட் மோடி தெரிவித்தார்.