

டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் துறையில் முன்னணி நிறுவனமான மொபில்ஐ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி. 1999-ம் ஆண்டிலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
1995-ம் ஆண்டிலிருந்து 1999-ம் ஆண்டுவரை ஹெக்ஸாகன் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் இணைநிறுவனர் பொறுப்பில் இருந்தவர்.
இஸ்ரேலில் உள்ள வெயிஸ்மேன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பிரிவில் இளநிலை பட்டமும் அமெரிக்காவில் உள்ளா மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முதுநிலை பட்டமும் பெற்றவர்.
1991-ம் ஆண்டிலிருந்து 1993-ம் ஆண்டு வரை இஸ்ரேலில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர்.
எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயர்ஸ் கூட்டமைப்பின் ஆலோசகர் பொறுப்பில் இருந்தவர்.
ஒளி நுண்ணறிவு, அனிமேஷன், கிராபிக்ஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.