

செயலி அடிப்படையில் செயல்படும் வாடகை கார் நிறுவனத்தை உரு வாக்கும் திட்டம் ஏதும் இல்லை என ரிலையன்ஸ் விளக்கம் அளித் திருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து கால் டாக்ஸி நிறுவனம் தொடங்கப்படும் என சந்தையில் ஊகங்கள் இருந்தன. இதுவரை அந்த ஊகங்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் பதில் அளிக்காமல் இருந்தது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 600 கார்களுக்கு முன்பதிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியானது.
இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் செய்தி தொடர்பாளர் இந்த செய்தியை மறுத்திருக்கிறார். நிறுவனத்துக்கு சம்பந்தம் இல்லாத பிரிவுகளில் முதலீடு செய்யும் திட்டம் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.