

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்ஷுரன்ஸ் ஐபிஓ இன்று வெளி யாகிறது. இதன் மூலம் ரூ.6,057 கோடி திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆறு வருடங்களுக்கு பிறகு இந்தியச் சந்தையில் வெளியாகும் மிகப் பெரிய ஐபிஓ இதுவாகும்.
இன்று தொடங்கும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்ஷு ரன்ஸ் ஐபிஓவுக்கு வரும் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலை ரூ.300 முதல் ரூ.334 வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
பொதுப் பங்கு வெளியீட்டிற்கு முன்னதாக 4.89 கோடி பங்கு களை தகுதி வாய்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர் களுக்கு ரூ.1,635 கோடி மதிப்பி லான பங்குகளை ஐசிஐசிஐ புரூ டென்ஷியல் ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு பங்கு ரூ.334 என்ற விலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோல் இந்தியா நிறுவனம் வெளியிட்டதற்கு பிறகு மிகப் பெரிய ஐபிஓ வெளியீடு இதுவாகும். கோல் இந்தியா நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு ஐபிஓ வெளியிட்டது. இதன் மூலம் 15,000 கோடி ரூபாயை கோல் இந்தியா நிறுவனம் திரட்டியது குறிப்பிடத்தக்கது.
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்ஷுரன்ஸ் நிறுவனம் ஐபிஓ வெளியிட கடந்த ஜூலை மாதம் 18-ம் தேதி செபியிடம் விண்ணபித்தது. செபி கடந்த செப்டம்பர் 2-ம் தேதி அனுமதி வழங்கியது.
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கி 68 சதவீத பங்குகளும், பிரிட்டனை சேர்ந்த புரூடென்ஷியல் கார்ப்பரேஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 26 சதவீத பங்குகளும் வைத்துள்ளன. மீதமுள்ள பங்குகளை விப்ரோ நிறுவனத்தின் பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனம் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த டெமாசெக் நிறுவனம் வைத்துள்ளன.
கடந்த வருடம் நவம்பரில் ஐசிஐசிஐ வங்கி 6 சதவீத பங்குகளை பிரேம்ஜி மற்றும் டெமாசெக் நிறுவனத்துக்கு விற்றது. ரூ.1,950 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் விற்கப்பட்டன. அப்போதைய சந்தை மதிப்பு படி ரூ.32,500 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ஐசிஐசிஐ புரூடென்ஷி யல் லைப் இன்ஷுரன்ஸ் நிறுவ னத்தின் 4 சதவீத பங்குகளை பிரேம்ஜி இன்வெஸ்ட் நிறுவனமும் 2 சதவீத பங்குகளை டெமோசெக் நிறுவனமும் வைத்துள்ளது.