நடப்பு நிதி ஆண்டில் வட்டி விகிதத்தை குறைக்க முடியாது: எஸ்பிஐ தலைவர் தகவல்

நடப்பு நிதி ஆண்டில் வட்டி விகிதத்தை குறைக்க முடியாது: எஸ்பிஐ தலைவர் தகவல்
Updated on
1 min read

நடப்பு நிதி ஆண்டில் அடிப்படை வட்டி விகிதம் 0.40 சதவீதம் குறைக்கப்பட்டிருக்கும் நிலையில் இனி வட்டியைக் குறைக்க முடியாது என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்திருக்கிறார்.

இப்போது எஸ்பிஐ வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 9.30 சதவீதமாக இருக்கிறது. இந்த நிதி ஆண்டில் வட்டியைக் குறைக்க முடியாது. அடுத்த நிதி ஆண்டு தொடக்கத்தில் இதைப்பற்றி சிந்திக்கலாம் என்று அவர் கூறினார். அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய ரிசர்வ் வங்கி வழிமுறைகளை உருவாக்கி இருக்கிறது. இந்த வழிமுறைகளால் சிறிய அளவில் மாற்றம் ஏற்படுமே தவிர பெரிய மாற்றங்கள் உருவாகாது. நடப்பு நிதி ஆண்டில் நிதி திரட்டும் திட்டம் இல்லை என்றார்.

செபியின் அடுத்த தலைவராக அருந்ததி நியமிக்கப்பட கூடும் என்ற செய்திகள் உலா வந்துகொண்டிருக்கும் நிலையில், இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. மீடியாக்கள்தான் இப்படி சொல்கின்றன. உங்க ளுக்கு ஏதாவது தகவல் தெரிந் தால் எனக்கு கூறுங்கள் என்று செய்தியாளர்களிடமே வினவினார் பட்டாச்சார்யா.

முன்னதாக இந்த வாரத்தில் ஹெச்டிஎப்சி வங்கி 0.05 சதவீதம் அடிப்படை வட்டி விகிதத்தை குறைத்தது. இப்போது ஹெச்டி எப்சி வங்கியின் அடிப்படை வட்டி விகிதமும் 9.30 சதவீதம் என்ற நிலையில் இருக்கிறது. இன்னொரு தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 9.35 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.

அடிப்படை வட்டி விகிதம் கணக்கிடும் முறை வரும் ஏப்ரலில் அமலுக்கு வருகிறது. அப்போது 0.80 முதல் 1.60 சதவீதம் வரை வட்டி விகிதம் குறையும் என்று வங்கித்துறை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in