

நமது பாரம்பரிய உணவு பொருட்களான தினை, சாமை, வரகு, குதிரைவாலி அரிசி, பனி வரகு போன்ற சிறுதானியம் மற்றும் பயிறு வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்வது, அருகி வருகிறது. போதிய லாபமின்மையே இப்பயிர்கள் சாகுபடி செய்வதை, விவசாயிகள் குறைத்து வருவதற்கான காரண மாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நாமக்கல் மாவட்டம் சின்ன மணலியைச் சேர்ந்த கே.வி.கே. உழவர் மன்றங்கள் கூட்டமைப்பினர் விளைபொருள்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றி அவற்றை விற்பனை செய்து லாபம் ஈட்டுவதுடன், பிற விவசாயிகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கி வருகின்றனர்.
இதுகுறித்து சின்னமணலி கே.வி.கே. உழவர் மன்றங்கள் கூட்டமைப்பு தலைவர் சங்கரன் கூறுகையில், ''நாமக்கல் - மோகனூர் சாலையில் வேளாண் அறிவியல் நிலையம் (கேவிகே) அமைந்துள்ளது. அங்கு விவசா யிகளுக்கு வேளாண்மை சம்மந்தமாக பல்வேறு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. கடந்த 2013ம் ஆண்டு எங்கள் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பயிற்சிக்கு சென்றிருந்தோம். அப்போது, தினை, சாமை, வரகு போன்றவற்றை எவ்வாறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்வது, என்பது குறித்து பயிற்சி அளித்தனர். அந்த பயிற்சியை பெற்றபின் அவற்றை விவசாயிகள் கூட்டமைப்பாக சேர்ந்து ஏன் செய்யக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.
அதன்பின் கேவிகே விவசா யிகள் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தினோம். அதையடுத்து தினை, சாமை, வரகு, குதிரை வாலி, பனிவரகு ஆகிய உணவுப் பொருட்கள் மூலம் தினை லட்டு, ராகி லட்டு, கம்பு லட்டு, சாமை, தினை முறுக்கு, ராகி, கம்பு முறுக்கு ஆகியவற்றை தயார் செய்கிறோம். தினை, சாமை உள்ளிட்டவற்றுடன் கோதுமை கலந்து மாவு தயார் செய்கிறோம். அந்த மாவு மூலம் சப்பாத்தி, பூரி, களி உள்ளிட்டவற்றை சமைக்கலாம். இயற்கையான முறையில் எவ்வித ரசாயணமும் இன்றி இவை தயார் செய்யப்படுகிறது.
அவ்வாறு தயார் செய்த உணவுப் பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் ஆட்சியர் அலுவலம், திருச்செங் கோடு வேளாண் விற்பனை நிலையம் ஆகிய இடங்களில் விற்பனை செய்கிறோம். இதை தவிர, புதிதாக சின்னமணலி அருகே வையப்பமலை, ஆண்ட களூர் கேட்டில் விற்பனை நிலையம் ஏற்படுத்தியுள்ளோம். சின்னமணலி கிராமத்தில் சிறிய ஆலை உள்ளது. அங்கு இந்த உணவுப் பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. இப்பணியில் எங்களது கூட்டமைப்பில் உள்ள விவசாயிகளை ஈடுபடுத்துகிறோம். எங்களது கூட்டமைப்பில் மாவட் டத்தில் உள்ள 42 விவசாய குழுக்கள் உள்ளனர்.
சேலம் மாவட்டம் கல்ராயன் மலை, பச்சைமலை, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், திருவண் ணாமலை ஆகிய இடங்களில் தினை, சாமை, வரகு, குதிரை வாலி அரிசி, பனி வரகு போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றை நேரடியாக கொள் முதல் செய்கிறோம். அதன்மூலம் விசாயிகளும் கணிச மான லாபம் ஈட்டுகின்றனர். தவிர, தினை, சாமை போன்ற பயிர் களின் விவசாயிகளிடம் வழங்கி அவற்றை சாகுபடி செய்து, பின் அவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கியும் வருகிறோம்.
பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் சமீபக காலமாக வரவேற்பு அதிகரித்து வருகிறது. எதிர் காலத்தில் எங்களது கூட்டமைப்பை நிறுவனமாக மாற்றும் திட்டம் உள்ளது. மேலும், விவசா யிகளுக்கும் இலவச பயிற்சி அளிக்கும் திட்டமும் உள்ளது’’ என்றார்.
மழையின்மை, உரங்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் விவசாயம் நலிவடைந்து வரும் காலகட்டத்தில், சின்ன மணலி விவசாயிகள் கூட்டமைப்பினர் தங்களை காலத்திற்கேற்ப தகவமைத்துக் கொண்ட துடன், பிறருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திருப்பது பாராட்டுக்குரியது. மேலும் விவரங்களுக்கு: 97885 83114.