Last Updated : 14 Jun, 2016 09:39 AM

 

Published : 14 Jun 2016 09:39 AM
Last Updated : 14 Jun 2016 09:39 AM

மாநிலங்களவையில் மசோதா நிறைவேறினால் 2017 ஏப்ரலில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்: ஜெயந்த் சின்ஹா தகவல்

நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான மசோதாவை நிறைவேற்ற அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த மசோதா நிறைவேறினால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி அமலுக்கு வரும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த மசோதா நிறைவேறினால், அடுத்து அதற்குரிய ஒப்புதல் சார்ந்த நடைமுறைகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப் படும் என்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் ஜெயந்த் சின்ஹா குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே ஜிஎஸ்டி முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டிருந் தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்க ளவையில் இந்த மசோதா கிடப் பில் உள்ளது. இதனால் நிர்ணயித் தப்படி இதை செயல்படுத்த முடியவில்லை.

அடுத்து நடைபெற உள்ள மழைக்கால கூட்டத் தொடரில் இந்த மசோதா நிறைவேறினால் இந்த சட்டம் ஏப்ரல் 1, 2017 முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.

இந்த மசோதா நிறைவேறு வதற்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆதரவின்றி இந்த மசோதா நிறைவேறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

2006-ம் ஆண்டு ஒருங்கிணைந்த வரி திட்டத்தை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி தற்போது இதை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பு உச்சபட்ச வரம்பை 18 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என்றும் அதிக உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு வரி இழப்பை ஈடு செய்ய ஒரு சதவீத கூடுதல் வரியை அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்துகிறது.

நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேறினாலும், மொத்தமுள்ள 29 மாநிலங்களில் பாதிக்கும் மேலான மாநிலங்கள் இதை தங்களது சட்டப் பேரவையில் நிறைவேற்றினால்தான் இதை நாடு முழுவதும் செயல்படுத்த முடியும். இதற்காக நாடாளுமன்றம் ஜிஎஸ்டி வரி விதிப்பை செயல்படுத்த தனி மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று சின்ஹா குறிப்பிட்டார்.

அரசியல் சட்டத் திருத்த மசோதா வாக இது நிறைவேற்றப்பட வேண் டுமானால் இத்துடன் 3 மசோதாக்கள் நிறைவேற வேண்டும். மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ஆகியன நிறைவேற்றப்பட வேண்டும்.இது மிகவும் சிக்கலான நடை முறை. இருப்பினும் அதை நிறை வேற்றித்தான் ஆக வேண்டும் என்று சின்ஹா குறிப்பிட்டார்.

இதனிடையே ஜிஎஸ்டி மசோதா தொடர்பாக நியமிக்கப்பட்ட அதி காரமளிக்கப்பட்ட மாநில நிதி அமைச்சர்களின் கூட்டம் செவ் வாய்க்கிழமை கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

இரண்டு நாள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்று, புதிய வரி விதிப்பு மசோதாவில் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையால் நாடு முழுவ தும் ஒரே சீரான வரி விதிப்பு அமலாகும். இதனால் ஏற்கெனவே உள்ள பல்வேறு வரி விதிப்புகள் நீங்கும். இந்த மசோதா ஏற்கெ னவே மக்களவையில் நிறைவேற் றப்பட்டு விட்டது.

மக்களவையில் ஒரு மனதாக நிறைவேறியதைப் போலவே மாநிலங்களவையிலும் இந்த மசோதா ஒரு மனதாக நிறை வேற வேண்டும் என்றே அரசு எதிர்பார்ப்பதாக சின்ஹா குறிப் பிட்டார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x