

சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத்துறை பாதுகாப்புக்கு 9 ஆயிரம் கோடி டாலர் செலவு ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் இது 7.6 சதவீதம் அதிகமாகும். 2020-ம் ஆண்டில் இது 11,300 கோடி டாலராக உயரும் என ஆய்வு நிறுவனமான கார்ட்னர் தெரிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப விவரங்களைப் பாதுகாப்பது, தவறுகளைக் கண்டுபிடிப்பது உள்ளிட்டவைகள் இதில் முக்கிய அம்சமாக இருக்கும். பாதுகாப்பு சார்ந்த சாஃப்ட்வேர்களை வாங்குவது அடுத்த மூன்று ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என கார்ட்னர் கணித்துள்ளது.
தவறுகளைக் கண்டுபிடிப்பது, அதற்கு உடனடியாக தீர்வு அளிப்பது, அதை அணுகுவது உள்ளிட்டவைகள்தான் தொழில்நுட்பத்தின் உச்சமாக இருக்கும். இவைதான் இத்துறையின் பாதுகாப்பு வளர்ச்சிக்கு உதவும், இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் அபரிமித வளர்ச்சியை எட்டும் துறையாக உருவாகும் என்று நிறுவனத்தின் முதன்மை ஆய்வாளர் சித் தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார்.