

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) நடக்க இருக்கும் வளாகத் தேர்வுகளில் கலந்துகொள்ள 9 நிறுவனங்களுக்கு தடை விதிக்கப் பட்டிருக்கிறது. இதன்படி ஒரு வருடத்துக்கு இந்த நிறுவனங்கள் ஐஐடி மும்பையில் வளாக தேர்வுகளை நடத்த முடியாது. 2016-17-ம் கல்வி ஆண்டு முடிந்த பிறகுதான் இந்த நிறுவனங்கள் கலந்துகொள்ள முடியும். கடந்த வருடம் சில மாணவர்களை வேலைக்கு எடுத்து குறிப்பிட்ட தருணத்தில் அந்த மாணவர்களுக்கு இந்த நிறுவனங்கள் வேலை கொடுக்கவில்லை மற்றும் வேலை வாய்ப்பை ரத்து செய்தது உள்ளிட்ட காரணங்களால் ஐஐடி மும்பை நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
புணேவை மையமாக கொண்டு செயல்படும் பெப்பர்டேப், (இந்த நிறுவனம் தனது செயல்பாடுகளை மூடிவிட்டது), ஹெல்த்கேர் துறையில் செயல்படும் போர்டியா மெடிக்கல், கேஷ்கேர் டெக்னாலஜீஸ், ஜான்சன் எலெக்ட்ரிக், ஜிபிஎஸ்கே உள்ளிட்ட 9 நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள் மாணவர்களுக்கு கொடுப்பதாக உத்தரவாதமளித்த வேலை வாய்ப்பினை ஏற்கெனவே ரத்து செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் லெகார்டே பர்னட் நிறு வனத்துக்கு சரியான அலுவலகம் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. மேரா ஹுனர் நிறுவனம் வேறு நிறுவனத்தின் பெயரில் மாணவர்களை வேலைக்கு எடுத் தது. அதேபோல லெக்ஸ் இன் னோவா, இண்டஸ்இன்சைட் ஆகிய நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.
இ-காமர்ஸ் துறையின் முக்கிய மான நிறுவனமான பிளிப்கார்ட்டும் குறிப்பிட்ட நேரத்தில் ஐஐடி மாண வர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. சில மாதங் களுக்கு பிறகு வேலைக்கு எடுப்ப தாக ஒப்புக்கொண்டது. அதனால் இந்த பட்டியலில் பிளிப்கார்ட் இடம்பெறவில்லை.