கருப்பு பணத்தை கண்டுபிடிக்க வெளிநாட்டு வரி ஒப்பந்தம் மறு ஆய்வு: நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்

கருப்பு பணத்தை கண்டுபிடிக்க வெளிநாட்டு வரி ஒப்பந்தம் மறு ஆய்வு: நிதியமைச்சர் அருண் ஜேட்லி தகவல்
Updated on
1 min read

கருப்பு பணத்தை கண்டுபிடித்து மீட்க வெளிநாடுகளுடனான வரி ஒப்பந்தங்கள் மறுஆய்வு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

சுவிட்சர்லாந்து எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் பட்டியல் இந்தியாவிடம் உள்ளது. அந்தப் பட்டியல் திருடப்பட்ட வங்கிக் கணக்கு விவரங் கள் என்று சுவிட்சர்லாந்து அரசு கூறுகிறது. இதனால் அந்த பட்டியல் தொடர்பான முழு விவரங்களை அளிக்க அந்த நாட்டு அரசு மறுத்து வருகிறது.

எனவே நம்மிடம் உள்ள பட்டியலின்படி தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தி போதுமான ஆதாரங்களை திரட்டி சுவிட்சர்லாந்து அரசிடம் அளிக்க திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக சுவிட்சர்லாந் துக்கு அண்மையில் சென்ற இந்திய குழுவினரிடம் அந்த நாட்டு அரசு சாதகமான பதிலை தெரிவித்துள்ளது.

வரி ஒப்பந்தங்கள் மறுஆய்வு

வெளிநாடுகளுடன் தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் வரி ஒப்பந்தங்களும் கருப்புப் பணத்தை மீட்பதில் தடைக்கல்லாக உள்ளன. அந்த ஒப்பந்தங்கள் குறித்து தற்போது மறுஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளின் நிதிசார் தகவல்களை தானாக அளிக்க வகை செய்யும் விதத்தில் அமெரிக்க வரி ஒப்பந்தங்கள் உள்ளன. அதே அணுகுமுறையில் வெளிநாடுகளுடன் வரி ஒப்பந்தங்களை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

கருப்புப் பணத்தை மீட்கும் விவகாரத்தில் உலக நாடுகள் இப்போது ஒன்றிணைந்துள்ளன. இதுதொடர்பாக பல்வேறு நாடுகள் தற்போது பரஸ்பரம் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. இந்த விஷயத்தில் சர்வதேச நடைமுறைகளை பின்பற்றியே நடக்க முடியும். வேறு குறுக்கு வழிகள் இல்லை.

உள்நாட்டில்கூட கருப்பு பணம் பெருமளவில் புழங்குகிறது. ரியல் எஸ்டேட், நகைக் கடைகள், ஆடம்பர பொருட்கள் ஆகியவற்றில் கருப்புப் பணம் புழக்கம் அதிகம் உள்ளது. அந்த கருப்புப் பணத்தை எளிதில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடிகிறது. வெளிநாடுகளில் பதுக்கப்பட் டுள்ள கருப்புப் பணத்தை பொறுத்தவரை பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண் டியுள்ளது.

இன்சூரன்ஸ் திருத்த மசோதா

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது இன்சூரன்ஸ் திருத்த மசோதா உள்ளிட்ட நிதிசார் மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். இந்த பொருளாதார சீர்திருத்தங்களில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸின் எத்தகையை நடவடிக்கையும் அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in