

ஆட்டோமோட்டிவ் துறையில் உயர்தொழில்நுட்ப கருவிகளை தயாரித்து வரும் மேக்னெட்டி மாரெலி (magneti marelli) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2015-ம் ஆண்டு ஜுன் மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து இந்த நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.
2009-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரை கிரைஸ்லர் (Chrysler) குழுமத்தின் மோபர் பிராண்டுக்கு தலைவராகவும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலும் இருந்தவர்.
பியட் கிரைஸ்லர் குழுமத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி பொறுப்பில் இருந்தவர்.
1980-ம் ஆண்டு பியாட் குழுமத்தில் மார்க்கெட் ஆய்வாளராக பணிக்குச் சேர்ந்தவர்.
இத்தாலியில் உள்ள துரின் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றவர்.
மார்க்கெட்டிங், நிதி நிர்வாகம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் 37 வருட பணி அனுபவம் கொண்டவர்.