சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் ரூ. 8,392 கோடி

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் ரூ. 8,392 கோடி
Updated on
1 min read

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்துள்ள தொகை 120 கோடி பிராங்க் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 8,392 கோடி என்று தெரியவந்துள்ளது.

இந்தியர்கள் போட்டு வைத் துள்ள பணத்தின் அளவு கடந்த சில ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காக சுருங்கிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கணக்கில் காட்டப்படாத வரி ஏய்ப்பு செய்யப்படும் தொகைகள் பொதுவாக சுவிட்சர்லாந்து வங்கிகளில் போடப்படுவதுண்டு.

இவ்விதம் கருப்புப் பணமாக போடப்படும் பணத்தை போட்ட வர்கள் பற்றிய விவரத்தை அளிக்கு மாறு இந்தியா உள்பட பல நாடுகளி லிருந்து சுவிட்சர்லாந்துக்கு நெருக் குதல் அதிகரித்துள்ளது. இதன் வெளிப்பாடாக சுவிஸ் வங்கிகளில் பணம் முதலீடு செய்வது குறைத் துள்ளது. 1997-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் போட்டுள்ள மிகக் குறைவான தொகை இதுவாகும்.

சுவிட்சர்லாந்தின் தேசிய வங்கி யில் (எஸ்என்பி) முன்னர் 121.70 கோடி ஸ்விஸ் பிராங்க் ஆக இருந்த தொகை 59.64 கோடி பிராங்காக 2015-ம் ஆண்டு இறுதியில் குறைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. 2006-ம் ஆண்டு இறுதியில் இந்தியர்கள் சுவிட்சர்லாந்து வங்கியில் போட்டிருந்த தொகை 650 கோடி (சுமார் ரூ. 23 ஆயிரம் கோடி) என தெரியவந்துள்ளது.

இந்தியர்கள் சுவிட்சர்லாந்து வங்கிகளிலிருந்து பணம் எடுப்பது படிப்படியாகக் குறைந்து வந்துள் ளது. 2011-ம் ஆண்டில் அதிகபட்ச மாக 12 சதவீதமும், 2013-ல் 42 சதவீதமாகவும் இருந்துள்ளது.

-பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in