

ஹவுசிங் டாட் காம் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதி காரி ஜேசன் கோத்தாரி ஸ்நாப்டீல் நிறுவனத்தின் உத்தி பிரிவு தலைவ ராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்நாப்டீல் நிறுவனத்தின் நிறுவனர் கள் குணால் பஹல் மற்றும் ரோஹித் பன்சால் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார் என ஸ்நாப்டீல் நிறு வனம் அறிக்கை மூலம் தெரிவித் திருக்கிறது. வரும் 16-ம் தேதி புதிய பொறுப்பில் கோத்தாரி இணைய இருக்கிறார். ஜேசன் ஏற்கெனவே இரு நிறுவனங்களின் சிஇஓவாக இருந்தவர். ஸ்நாப்டீல் குழுமத் துக்கு அவரை வரவேற்கிறோம் என ஸ்நாப்டீல் நிறுவனர் குனால் பஹல் தெரிவித்தார்.