

அப்போலோ டயர்ஸ் நிறுவனத் தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். 2009-ம் ஆண்டிலிருந்து இந்த பொறுப்பில் இருந்து வருகிறார்.
1995-ம் ஆண்டில் தயாரிப்பு மற்றும் உத்திகள் பிரிவில் பணிக்குச் சேர்ந்தார். 2002-ம் ஆண்டில் தலைமைச் செயல்பாட்டு அதி காரியாக நியமிக்கப்பட்டார்.
டன்லப் டயர்ஸின் தென் ஆப்பி ரிகா, ஜிம்பாப்வே ஆலைகளைக் கையகப்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தவர்.
அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி, குளோபல் பைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் மேலாண்மை பயிற்சி பெறுநராக அனுபவம் பெற்றவர்
2006-ம் ஆண்டிலிருந்து பிடிஒ எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் பொறுப்புகள் வகிக்காத, தினசரி அலுவல்கள் இல்லாத இயக்குநராக இருந்து வருகிறார்.
இந்திய ஆட்டோமொபைல் டயர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பு வகித்தவர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள லீஹை பல்கலைக் கழகத்தில் தொழில்துறை பொறியியலில் பட்டமும், மேலாண்மையியலில் உயர்கல்வியும் முடித்தவர்.