

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீடு நேற்று மாலை முடிவடைந்தது. 6,000 கோடி ரூபாய் ஐபிஓவுக்கு 10.42 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந் தன.
கடந்த 2010-ம் ஆண்டு வெளி யான கோல் இந்தியா நிறுவனத் தின் ஐபிஓவுக்கு பிறகான மிகப் பெரிய ஐபிஓ இதுவாகும். 13.24 கோடி பங்குகளுக்கு 10.42 மடங்கு அளவுக்கு கூடுதலான விண்ணப் பங்கள் வந்தன. சிறு முதலீட்டாளர் களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு 1.30 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்தன.
ஒரு பங்கு விலை ரூ.300-334 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிறுவனத்தில் ஐசிஐசிஐ வங்கிக்கு 68% பங்கு களும், புரூடென்ஷியல் நிறுவனம் வசம் 26% பங்குகள் உள்ளன.