Last Updated : 05 Jun, 2017 07:45 AM

 

Published : 05 Jun 2017 07:45 AM
Last Updated : 05 Jun 2017 07:45 AM

ஜிஎஸ்டி வரி விதிப்பால் தங்க நகை விலை உயரும்: பிஸ்கட், காலணி, ஆடைகள் விலை குறையும்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு அமலுக்கு வந்தால் தங்க நகை விலை சிறிய அளவில் உயரும். அதேநேரம் பிஸ்கட் மற்றும் காலணி ஆகிய வற்றின் விலை சிறிதளவு குறையும்.

நாடு முழுவதும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் (மேற்கு வங்கம் தவிர) ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலுக்கு வரு கிறது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன் சில், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதமும், பீடி இலைக்கு 18 சதவீதமும், பீடிக்கு அதிகபட்சமாக 28 சதவீதமும் வரி நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் சிகரெட்டை போல பீடிக்கு செஸ் (வரி மேல் வரி) இருக்காது.

இதுபோல பிஸ்கட்களுக்கு 18 சதவீதமும், ரூ.500-க்கு குறைவான விலை உள்ள காலணிகளுக்கு 5 சதவீதமும், அதற்கு மேல் விலை உள்ள காலணிகளுக்கு 18 சதவீதமும் வரி நிர்ணயம் செய்துள்ளது.

ஜவுளித் துறையைப் பொறுத்த வரை பட்டு, சணல் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பருத்தி மற்றும் செயற்கை நூலிழை உள்ளிட்டவற்றுக்கு 5 சதவீத வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கைகளால் தயாரிக்கப்படும் ஆடைகளின் விலை ரூ.1,000-க் குள் இருந்தல் 5 சதவீத வரி விதிக்கப்படும். இப்போது இது 7 சதவீதமாக உள்ளது. ரூ.1,000-க்கு மேல் விலை உள்ள ஆடைகளுக்கு தற்போதுள்ள 12 சதவீத வரியே தொடரும்.

ஜிஎஸ்டியில் காலணி மற்றும் ஜவுளித் துறைக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ள தாக அருண் ஜேட்லி தெரிவித் துள்ளார்.

இப்போது ஒரு கிலோ பிஸ்கட் ரூ.100-க்கு கீழே இருந்தால் 20.6 சதவீதமும், அதற்கும் மேல் இருந்தால் 23.11 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் அனைத்து பிஸ்கட்டுக்கும் 18 சதவீத வரி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. ரூ.500-க்கு கீழ் விலை உள்ள காலணிகளுக்கான வரி 9.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.500-க்கு மேல் விலை உள்ள காலணிகளுக்கு 23.1 முதல் 29.58 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இவை அனைத்துக்கும் 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தங்கத்துக்கு இப்போது 2 சத வீத வரி விதிக்கப்படுகிறது. இதை மூன்று சதவீதமாக உயர்த்த முடி வெடுக்கப்பட்டுள்ளது. உள்ளீட்டு வரிச் சலுகையும் பெற முடியும்.

“தங்கத்துக்கு இப்போது உள் ளதைப் போல 2 சதவீத வரிவிகி தமே தொடர வேண்டும் என சில மாநிலங்கள் ஆலோசனை தெரி வித்தன. மேலும் சில மாநிலங்கள் 5 சதவீதமாக உயர்த்தலாம் என தெரிவித்தன. இதையடுத்து, 3 சதவீதமாக வரி உயர்த்தப்பட்டது” என அருண் ஜேட்லி தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் முடிவை ஒத்தி வைக்குமாறு மேற்குவங்க நிதி யமைச்சர் கோரிக்கை விடுத்தார். இதை உடனடியாக அமல்படுத்தி னால் பிரச்சினைகள் பெரிதாகும் என்றும் ஒரு மாதம் ஒத்தி வைப்ப தால் எந்தப் பிரச்சினையும் இருக் காது என்றும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து ஜேட்லி கூறும் போது, “மற்ற மாநில நிதி அமைச்சர்கள் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. எனவே, ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமலுக்கு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார். கேரள நிதியமைச்சர் கூறும்போது, “ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ஜூலை 1-ம் தேதி அமல்படுத்த அனைவரும் ஒப்புக்கொண்டனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x