இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிக்க ஹூவாய் முடிவு

இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிக்க ஹூவாய் முடிவு
Updated on
1 min read

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய், இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிக்க முடிவு செய்துள்ளது. பிளக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட்போன்களை அடுத்த மாதம் முதல் தயாரிக்கப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னையில் பிளக்ஸ் நிறுவனத்துக்கு ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஹூவாய் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலையின் உற்பத்தித் திறன் 2017-ம் ஆண்டு இறுதியில் 30 லட்சமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தனது விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை மையங்களின் எண்ணிக் கையை ஹுவாய் அதிகரித்து வருகிறது. இந்நிறுவனத்துக்கு 200 சேவை மையங்கள் உள்ளன. இவற்றில் 30 மையங்கள் ஹூவாய் பிரத்யேக மையங்களாகும்.

மேக் இன் இந்தியா திட்டத்துக்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதற்கு இந்த ஆலை இங்கு தொடங்கப்பட்டதே மிகச் சிறந்த உதாரணம் என்று ஆலையைத் தொடங்கி வைத்த மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இந்தியாவில் கடந்த 16 ஆண்டு களாக செயல்பட்டு வருவதாக ஹூவாய் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜே சென் குறிப்பிட்டார். இந்தியாவில் தற்போதுதான் ஆலை அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in