Last Updated : 23 Jun, 2016 10:03 AM

 

Published : 23 Jun 2016 10:03 AM
Last Updated : 23 Jun 2016 10:03 AM

குறைந்த மதிப்பெண் எடுத்த பணியாளர்களை அடித்த பயிற்சியாளர்: சீன வங்கியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்

வங்கி ஊழியர்களின் திற மையை ஊக்குவிக்க நியமிக்கப் பட்ட பயிற்சியாளர், ஊழியர்கள் திறனறித் தேர்வில் குறைந்த மதிப் பெண் எடுத்ததற்காக கம்பால் அடித்துள்ளார். 8 ஊழியர்கள் இவ்விதம் பயிற்சியாளரிடம் அடி வாங்கிய சம்பவத்தின் மொபைல் வீடியோ காட்சிகள் வெளியான தால் பரபரப்பாகியுள்ளது.

சில பணியாளர்களின் தலையை மொட்டையடித்தும், பெண் ஊழியர்களின் தலை முடியைக் கத்தரித்தும் அவமானப்படுத்திய சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாங்ஸி சாங்ஸே கிராமப்புற வர்த்தக வங்கியான இது சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஷான்ஸி மாகாணத்தில் அமைந்துள்ளது. இந்த வங்கி யின் பணியாளர்களை ஊக்கு விக்க ஜியாங் யாங் நியமிக்கப் பட்டிருந்தார். ஷாங்காயில் செயல்படும் பயிற்சி மையத்தில் ஜியாங் யாங் பயிற்சியாளராக உள்ளார்.

கடந்த வார இறுதியில் வங்கிப் பணியாளர்கள் 200 பேருக்கு திறனறித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 8 ஊழியர்கள் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்திருந் தனர்.இதற்கு ஜியாங் காரணம் கேட்டார். அதற்கு ஒருவர் தான் உறுதியாக செயல்படவில்லை என்றும், மற்றொருவர் தான் தவறு செய்யவில்லை என்றும், மூன்றாமவர் குழுவின் ஒத்து ழைப்பு இல்லாததே இதற்குக் காரணம் என்று கூறினர்.

பின்னர் இவர்களை வரிசை யாக நிற்க வைத்து கம்பால் அடித்துள்ளார். பின்னர் ஒரு பெண் ஊழியரின் தலைமுடியை கத்தரித்துள்ளார். இதிலும் ஆத்தி ரம் அடங்காமல் பணியாளர் களுக்கு மொட்டை அடித்துள் ளார்.இந்த சம்பவம் அனைத்தும் சீன சமூக வலைத்தளத்தில் வெளி யாகியுள்ளது. இது தொடர்பாக பயிற்சி மையம் பதில் அளிக்க மறுத்துவிட்டது. பயிற்சியாளரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சீன அரசு, வங்கியின் தலைவர் மற்றும் துணை கவர்னரை பதவி நீக்கம் செய்தது. பயிற்சியாளர் பகிரங்க மாக மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x