பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி

பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி
Updated on
1 min read

இந்திய பங்குச் சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸ் 238 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிப்டி 59 புள்ளிகள் சரிந்து 8110 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்துள்ளது. மேலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.67 ஆக சரிந்தது.

ஆசியச் சந்தைகளில் நிலவிய சரிவான வர்த்தகப் போக்கு இந் திய பங்குச் சந்தைகளிலும் எதி ரொலித்தது. கடந்த வார இறுதி யில் சரிந்து முடிந்த வர்த்தகம், நேற்றைய வர்த்தகத் தொடக் கத்திலும் எதிரொலிக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது.

மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிய தொடங்கியுள் ளது சர்வதேச சந்தை நில வரங்களை பாதித்துள்ளது. இதன் காரணமாகவும் இந்திய சந்தைகள் இறக்கமான வர்த்த கத்தைக் கண்டன.

வெள்ளிக்கிழமை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் நிலவிய விற்கும் போக்கு ஆசிய சந்தைகளில் தொடர்ந்துள்ளது என்றும், கடந்த வாரத்தில் வெள் ளிக்கிழமை வர்த்தக நேரத்துக்குப் பிறகு வெளியான தொழில்துறை உற்பத்தி புள்ளிவிவரங்களும் சந்தை இறக்கத்துக்கு காரணமாக அமைந்தது எனவும் சந்தை முகவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக கேபிடல் குட்ஸ் துறை கடும் சரிவைக் கண்டது.

இந்திய சந்தைகளில் நேற் றைய நிலவரத்தை பொறுத்தவரை ஐடியா செல்லுலார், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டர்ஸ், டாடா ஸ்டீல் பங்குகள் 3 சதவீதத் துக்கும் மேல் நஷ்டத்தை சந்தித்தன.

சர்வதேச சந்தைகளை பொறுத் தவரை ஹாங்செங் 2.58 சதவீதம் சரிந்துள்ளது. ஜப்பானின் நிக்கி சந்தை 3.63 சதவீதம் சரிவாக வர்த்தகம் கண்டுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.67.29 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 35 காசுகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. முன்னதாக வர்த்தக தொடக்கத்தில் டாலரின் மதிப்பு நிலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in