

*விப்ரோ நிறுவனத்தின் முதன்மைத் துணைத் தலைவர் மற்றும் தலைமை நிதி அதிகாரி. ஏப்ரல், 2015-ம் ஆண்டிலிருந்து இந்த பொறுப்பில் உள்ளார். இதற்கு முன்பு விப்ரோ டெக்னாலஜியின் தலைமை நிதி அதிகாரியாக இருந்தவர்.
*2002-ம் ஆண்டு விப்ரோ நிறுவனத் தில் இணைந்தவர். நிறுவனத்தின் நிதித்துறை சார்ந்த பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணி யாற்றியவர். விப்ரோ டெக்னாலஜியின் ஐரோப்பிய செயல் பாடுகளில் இரண்டு பிரிவுகளில் பிராந்திய நிதித் தலைவர் மற்றும் சர்வதேச நிதித் தலைவர் பொறுப்பு வகித்துள்ளார்.
*ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் கருவூலத்துறை மேலாளராக இருந்தவர். இந்த நிறுவனத்தில் `குளோபல் கார்பரேட் ஹானர்ஸ் விருது’ வாங்கியவர்.
*அமெரிக்காவின் சார்ட்டட் குளோபல் மேனேஜ்மெண்ட் மற்றும் இந்தியாவின் பட்டயக் கணக்காளர் பயிற்சி முடித்தவர். சூரத் என்ஐடி கல்வி நிறுவனத்தில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். மும்பை என்எம்ஐஎம்எஸ் கல்வி நிறுவனத்தில் மேலாண்மை நிர்வாகத்தில் பட்டய கல்வி முடித்துள்ளார்.
*பெங்களூரைச் சேர்ந்தவர். நியூயார்க் பங்குச் சந்தை ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.