

இந்தியா பொருளாதாரம் பல மடைந்து வருவதாகவும் 10 சதவீத வளர்ச்சி சாத்தியம் என்றும் தொழில்துறையின் முக்கிய நபரும் ஹெச்.டி.எப்.சியின் தலைவருமான தீபக் பரேக் தெரிவித்திருக்கிறார். 10 சதவீத வளர்ச்சி சாத்தியம் என்றாலும் எப்போது இலக்கை அடையும் என்பதை கணிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வளவு யோசித்தாலும் இப்போது இருக்கிற பலம் முன்பு இருந்ததுபோல தெரியவில்லை. பங்குச்சந்தை உயர்வு, நிலையான பலமான அரசு, கச்சா எண்ணெய் தொடர்ந்து சரிவது ஆகிய சாதகமான சூழல் நிலவுகிறது என்றார்.
இந்த சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி 10 சதவீத வளர்ச் சியை அடையலாம் என்று ஐஎஸ்பி கேபிடல் மார்கெட்ஸ் மாநாட்டில் தெரிவித்தார். மேலும் நீதித்துறை, காவல்துறை, தொழி லாளர் மேம்பாடு மற்றும் நிதி சீர்திருத்தங்கள் இல்லாமல் இந்த வளர்ச்சியை எட்ட முடியாது என்று அவர் தெரிவித்தார்.
நடப்பு நிதி ஆண்டில் 5.5 முதல் 5.9 சதவீத வளர்ச்சி சாத்தியம். இது பல வளர்ந்த, வளரும் நாடுகளை விட அதிகமான வளர்ச்சி என்றார்.