

அவந்தா குழுமத்தின் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை 4,200 கோடி ரூபாய் கொடுத்து அதானி பவர் நிறுவனம் வாங்கியது. சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் இருக்கும் இந்த உற்பத்தி நிலையம் கவுதம் தாபர் தலைமை செயல்பட்டு வருகிறது.
கடந்த நான்கு மாதங்களில் அதானி பவர் கையகப்படுத்தும் இரண்டாவது மின் உற்பத்தி நிலையம் இதுவாகும். உடுப்பியில் இருக்கும் லான்கோ இன்பிரா நிறுவனத்தின் 1200 மெகாவாட் உற்பத்தி திறனுடைய மின் உற்பத்தி நிலையத்தை ரூ. 6,000 கோடி கொடுத்து வாங்கியது குறிப்பிடத்தக்கது. தனியார் துறையில் அதிக மின் உற்பத்தி செய்யும் நிறுவனம் அகமதாபாத்தை சேர்ந்த அதானி குழுமமாகும்.
இந்த குழுமத்தின் இப்போதைய உற்பத்தி திறன் 11,040 மெகா வாட். 2020-ம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் உற்பத்தி திறனை எட்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்படுகிறது அதானி குழுமம். இந்த பரிவர்த்தனைக்கு மேக்குரெ கேபிடல் நிறுவனம் ஆலோசகராக செயல்பட்டது.