

சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு (எஸ்.இ.இசட்) சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறைகளுக்கு ஏற்ப அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இந்த அவசர சட்டம் அடுத்த வாரம் பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜிஎஸ்டி ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான வழிகாட்டுதலைத் தயாரிக்கும் பணியில் மத்திய வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2005-ம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங் களுக்கான சட்டத்தில் சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி அமலாகும் பட்சத்தில் இந்த நடைமுறை ஏற்புடையதாக இருக்காது. ஜிஎஸ்டி-க்கு ஏற்ப திருத்தங்களுடன் கூடிய அவசர சட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறப்புப் பொருளாதார மண்ட லங்களில் செயல்படும் நிறுவனங் கள் பொருள் உற்பத்தியின் போதே ஏற்றுமதிக்கான வரிச் சலுகையைப் பெறுகின்றன. இதற்கேற்ப ஜிஎஸ்டி அமலாக்கத் தின்போது சலுகை கிடைக்கும் வகையில் புதிய அவசர சட்டம் இருக்கும்.
அதேபோல தற்போதைய சட்டத்தின்படி எஸ்இஇஸட் களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு சுங்க வரி மற்றும் உற்பத்தி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
எஸ்இஇஸட்கள் நாட்டின் ஏற்றுமதியில் முக்கிய பங்க ளிப்பை அளிக்கின்றன. ஏற்றுமதி யில் எஸ்இஇஸட்களின் பங்க ளிப்பு 16 சதவீதமாக உள்ளது.
எஸ்இஇஸட்களுக்கு அளிக் கப்படும் வரிச் சலுகை உள்ளிட்ட விஷயங்கள் தொடர்ந்து கிடைக்கும் வகையில் புதிய மசோதாவாக கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.