இந்திய பணியாளர்களில் 34 சதவீதம் பேர் திறமையற்றவர்கள்

இந்திய பணியாளர்களில் 34 சதவீதம் பேர் திறமையற்றவர்கள்
Updated on
1 min read

இந்திய பணியாளர்களில் 34 சதவீதம் பேர் திறமையில்லாத வர்களாக இருக்கின்றனர் என்று சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது சீனாவில் 47 சதவீதமாக இருக்கிறது.

பிஎன்பி மெட்லைப் பணியாளர் நலன் குறித்த ஆய்வை வெளி யிட்டுள்ளது. ஆறு நாடுகளில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்து பிஎன்பி மெட்லைப் அறிக்கை வெளியிட்டுள்ளது.

34 சதவீத இந்திய பணியாளர்கள் திறமை குறைவாக இருப்பதாக நம்புகிறார்கள். இது போலாந்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் 40 சதவீதமாகவும் சீனாவில் 47 சதவீதமாகவும் உள்ளது. ரஷ்யாவில் 56 சதவீதம் பேர் திறமை குறைவாக உள்ளார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் பணியாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்கும் கவர்ந்து இழுப்பதற்கும் சம்பளம் மற்றும் சலுகைகளில் அதிகம் கவனம் செலுத்தும். தற்போது பணியாளர்களை தக்கவைத்துக் கொள்ள வெறும் சம்பளம் மட்டுமல்லாமல் சிறப்புச் சலுகைகளை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

மற்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக பணியாளர்களை ஈர்க்க சலுகைகளை வழங்குகிறார்கள் என்று ஆய்வில் கலந்து கொண்ட 88 சதவீத இந்திய பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். மிகப் பெரும்பான்மையான எம்என்சி நிறுவனங்கள் மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்றவற்றை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பணியாளர்களுக்கு சலுகை களை வழங்கவேண்டியது அதிகரித்து வருகிறது. மிகச் சிறிய நிறுவனங்களும் திறமை யானவர்களை பணியில் தக்க வைத்துக் கொள்வதற்கு வரக்கூடிய வருடங்களில் சலுகைகளை வழங்க வேண்டி வரும். உடல்நலம் சார்ந்த சலுகைகள், ஓய்வுகால சலுகைகள் மற்றும் நிதி சார்ந்த திட்டங்கள் போன்றவை இந்த சலுகைகளில் முக்கிய பங்கு வகிக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in