ஜிஎஸ்டி கவுன்சில்: அரசு அறிவிக்கை வெளியீடு

ஜிஎஸ்டி கவுன்சில்: அரசு அறிவிக்கை வெளியீடு
Updated on
1 min read

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நிர்ணயிப்பது தொடர்பான குழு நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்தக் கவுன்சில்தான் பொருள் களுக்கான வரி விதிப்பை நிர்ண யிக்கும். இந்த கவுன்சிலின் தலைவராக மத்திய நிதிஅமைச்சர் இருப்பார். இக்குழுவின் உறுப்பினர் களாக மாநில நிதிஅமைச்சர்கள் அல்லது வரிவிதிப்பு அமைச்சர் அல்லது மாநில அரசு நியமிக்கும் அமைச்சர் இருப்பர்.

இது தவிர மத்திய வருவாய் மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் இந்தக் கவுன்சிலின் உறுப்பினராக இருப்பர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 279 ஏ பிரிவின்படி குடியரசுத் தலைவர் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக் குழுவை நியமித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை தெரிவிக்கிறது.

இந்த வாரத் தொடக்கத்தில் மத்திய அரசு அதிகாரம் மிக்க ஜிஎஸ்டி கவுன்சில் அமைப்பதற் கான ஒப்புதலை அளித்தது. இந்தக் குழு அனைத்து வரி விதிப்பு பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து நவம்பர் 22-ம் தேதி வரி விதிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இம்மாதம் 22, 23-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி கேட்டு கொண்டுள்ளார்.

வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அடிக்கடி நடத் தப்பட வேண்டும். மாதிரி ஜிஎஸ்டி சட்டம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, மற்றும் வரி விலக்கு தொடர்பான விஷயங்கள் உடனுக்குடன் நிறை வேற்றப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in