Last Updated : 26 Jan, 2017 10:56 AM

 

Published : 26 Jan 2017 10:56 AM
Last Updated : 26 Jan 2017 10:56 AM

ஸ்மார்ட்போன் வாங்க ரூ.1,000 மானியம்: முதலமைச்சர்கள் குழு மத்திய அரசுக்கு கோரிக்கை

மின்னணு பரிவர்த்தனையை ஊக்கு விக்க குறைவான வருமான பிரி வினருக்கும், சிறு வர்த்தகர்களுக் கும் ஸ்மார்ட்போன் வாங்க மானியம் அளிக்க வேண்டும் என மாநில முதலைமைச்சர்கள் குழு மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்துள்ளது. இந்த பிரிவினர் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு ரூ.1,000 மானியம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

சிறு வர்த்தகர்களுக்கு மின்னணு பரிவர்த்தனைக்கான வரிச் சலுகை அளித்தால் மின்னணு வர்த்தகம் அதிகரிக்கும். ரூ.50,000 த்துக்கு மேல் பணத்தை எடுக்கிறபோது பணப் பரிவர்த்தனை வரி விதிக்க வேண்டும் என்றும் குழு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான இந்த குழுவில், மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், சிக்கிம் முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங் உள்ளிட்டவர்கள் உள்ளனர்.

முதலமைச்சர்கள் குழுவின் இந்த அறிக்கை நேற்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், அரசு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து மின்னணு பரிவர்த்தனைகளுக்கும் எம்டிஆர் கட்டணத்தை குறைக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும். மற்றும் அனைத்து பெரிய பணப் பரிவர்த்தனைக்கும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணத்தை வங்கிகள் வர்த்தகர் களிடமிருந்து பிடித்தம் செய்கின் றன. மத்திய அரசு ஆதார் இணைப்பிலான பரிவர்த்தனை முறையை ஊக்குவிக்க வேண் டும் என அனைத்து முதலமைச் சர்களுமே குறிப்பிட்டுள்ளனர்.

மைக்ரோ ஏடிஎம் மையங்கள், பயோமெட்ரிக் சோதனை இயந் திரங்களுக்கு ஊக்கத்தொகைகள் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். எங்களது இந்த இடைக்கால அறிக்கை அனைத்து பேமண்ட் வங்கிகளுக்கும் அனுப் பப்பட்டுள்ளன. வங்கியாளர்கள் அனைத்து கணக்குகளையும் ஆதாருடன் இணைக்க வேண்டும். நாடு முழுவதும் 1.54 லட்சம் தபால் நிலையங்கள் ஆதார் இணைப்பிலான மைக்ரோ ஏடிஎம் இயந்திரங்களுடன் இணைக்கபட வேண்டும் என்றும், அனைத்து வர்த்தகர்களுக்கும் பயோ மெட்ரிக் சென்சார் 50 சதவீத தள்ளுபடியில் அளிக்க வேண்டும். இதன் மூலம் பரிவர்த்தனையை ஊக்குவிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த அறிக்கை மின்னணு பரிவர்த்தனையை அதிகரிப்பதற் காக வழிகளை உறுதி செய்வதாக உள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 1080 மின்னணு பரி வர்த்தனை மையங்களே உள்ளன. சிங்கப்பூரில் இது 31,096 என்கிற அளவில் உள்ளது. இங்கிலாந்தில் 30,078 மையங்களும் பிரேசிலில் 25241 மின்னணு மையங்களும் உள் ளன. தென் ஆப்பிரிக்காவில் 7189, மெக்ஸிகோவில் 16602 மையங் களும் உள்ளன என்றும் அறிக்கை சுட்டி காட்டியுள்ளது.

பணப் பரிவர்த்தனை வரி: இன்னும் முடிவெடுக்கவில்லை

ஐம்பதாயிம் ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால் வரி விதிக்கலாம் என்னும் பரிந்துரையின் மீது இன்னும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. ஆந்திரா முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு தலைமையிலான முதலமைச்சர் குழு இந்த பரிந்துரையை செய்தது. இது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. விரைவில் முடிவெடுக்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x