

தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 27969 புள்ளியையும், நிப்டி 8350 புள்ளியையும் தொட்டன. ஆனால் முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்ததன் காரணமாக பங்குச்சந்தைகள் சரிவில் முடிந்தன.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 5 புள்ளிகள் சரிந்து 27860 புள்ளி யிலும், நிப்டி 1.95 புள்ளிகள் உயர்ந்து 8324 புள்ளி யிலும் முடிவடைந்தன. ஆனால் மிட்கேப் மற்றும் லார்ஜ் கேப் குறியீடுகள் 1 சதவீத அளவுக்கு உயர்ந்து முடிந்தன.வெள்ளிக்கிழமை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 1,755 கோடி ரூபாய் அளவுக்கு இந்திய சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள்.
விமான எரிபொருள் விலை 7.3 சதவீத அளவுக்கு குறைந் திருப்பதால் விமானத்துறை பங்குகள் உயர்ந்தன. ஸ்பைஸ் ஜெட் பங்கு வர்த்தகத்தின் முடிவில் 6.7 சதவீதம் உயர்ந்து முடிந்தது. மொகரம் பண்டிக்கைய முன்னிட்ட பங்குச்சந்தைகளுக்கு இன்று விடுமுறையாகும்.