Last Updated : 19 Apr, 2017 10:12 AM

 

Published : 19 Apr 2017 10:12 AM
Last Updated : 19 Apr 2017 10:12 AM

காசோலை அளித்தால் கட்டணம்: எஸ்பிஐ கார்டு நிறுவனம் முடிவு

எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கான தொகையை காசோலை மூலம் செலுத்துவோர் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என எஸ்பிஐ கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) துணை நிறுவனமான எஸ்பிஐ கார்டு, கடன் அட்டைகளை அளித்து வருகிறது.

கடன் அட்டைகளுக்கான தொகையை காசோலை மூலம் செலுத்துவோரிடம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி விஜய் ஜஸுஜா தெரிவித்துள்ளார்.

ரூ. 2 ஆயிரத்துக்கும் குறைவான தொகையை காசோலை மூலம் அளிப்பவர்கள் இனி ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் அட்டைக்கான தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்த பிறகு பலரும் காசோலைகளை அதற் குரிய பெட்டியில் போட்டுவிட்டு சர்ச்சை செய்கின்றனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காசோலை மூலமான பரிவர்த் தனையைக் குறைக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.

நிறுவன வாடிக்கையாளர்களில் 92 சதவீதம் பேர் ஆன்லைன் மூலமாக பரிவர்த்தனை செய் வதாக ஜஸுஜா தெரிவித்துள்ளார்.

எஸ்பிஐ வங்கி வாடிக்கை யாளர்கள் காசோலை அளித்தால் அதற்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. பிற வங்கிகளின் காசோலைகளை அளிப்பவர்கள் மட்டுமே இத்தொகையை செலுத்த வேண்டும்.

காசோலை மூலம் செலுத்து வோரில் 6 சதவீதம் பேர ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமான தொகைக்கான காசோலை அளிப்பவர்களாக உள்ளனர். எஞ்சிய 2 சதவீதம் பேர்தான் இந்த கட்டண விதிப்பால் பாதிக்கப்படுவர் என்று ஜஸுஜா தெரிவித்தார்.

காசோலை பரிவர்த்தனையைக் குறைக்கவும் அதேசமயம் ஆன்லைன் பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரிவார்ட் புள்ளிகள் அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

வங்கி அல்லாத அதேசமயம் கடன் அட்டைகளை விநியோகிக்கும் நிறுவனமாக எஸ்பிஐ கார்டு செயல்படுகிறது. இது பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனமாகும். இதனால் காசோலைகளை தங்கள் கணக்கில் போடுவது, அதை கிளியரிங் செய்வதற்கு குறிப்பிட்ட தொகையை செலவிட வேண்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x