Last Updated : 22 Nov, 2013 03:07 PM

 

Published : 22 Nov 2013 03:07 PM
Last Updated : 22 Nov 2013 03:07 PM

Principal-Agent theory - என்றால் என்ன?

பல்லாயிரம் முதலீட்டாளர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க முடியாது என்பதால் தான் Public Limited companyயில் உள்ள முதலீட்டார்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு Board of Directors-ஐ தேர்ந்தெடுத்து அதன் மூலமாக கம்பெனி நிர்வாகம் செய்யப்படுகிறது. முதலீட்டாளரும், நிறுவன மேலாண்மை அமைப்பும் வெவ்வேறாக இருப்பது Public Limited company முறையை பிரபலாமாக்கியுள்ளது.

பொதுவாக, இந்த இரு குழுக்களின் நோக்கங்கள் வெவ்வேறாக இருக்கும். முதலீட்டாளர்கள் நிறுவனம் அதிகபட்ச லாபம் பெறவேண்டும் என்ற நோக்கமும், மேலாண்மை அமைப்புக்கு நிறுவனத்தின் சந்தை அளவு பெரிதாக இருக்கவேண்டும், அல்லது சொத்துமதிப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்ற வேறு நோக்கங்கள் இருக்கலாம். மேலும், நிறவனத்தின் அன்றாட செயல்பாடுகள் மேலாண்மை செய்பவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதால், அவற்றினை முதலீட்டாளர்கள் எவ்விதத்திலும் கண்காணிக்கவோ, கட்டுபடுத்தவோ முடியாது. இந்த சூழலில் தொழிலார்கள் திறமையாக உழைப்பார்கள் என்பதை உறுதி செய்யமுடியாது. இதில் பங்குதாரர்களை Principal என்றும், மேலாண்மை செய்பவர்களை agent என்றும், இந்த பிரச்னையை Principal-Agent பிரச்சனை என்றும் கூறுவர்.

இந்த பிரச்னை எழாமல் இருக்க principal agent இடையே தெளிவான ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும். ஆனால் இவ்வாறான ஒப்பந்தம் செய்து கொள்வது மிக சிரமம், ஆனால் வேறு முறைகளைக் கையாளலாம். உதாரணமாக, மேலாண்மையில் உள்ளவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பங்கினை கொடுப்பது. இதற்கு executives/employees stock option என்று பெயர். இவ்வாறு மேலாண்மையில் உள்ளவர்களையும், தொழிலார்களையும் பங்குதாரர்களாக ஆக்கும் போது principal agent இடையே தெளிவான புரிதல் இருக்கும்.

Principal-Agent பிரச்னை தொடர்பாக பல பொருளியல் கோட்பாடுகள் உள்ளன. அவை முதலீட்டார்கள் லாபம், அல்லது பங்கு விலை அதிகரிப்பு என்ற நோக்கங்களுடன் இருக்க, மேலாண்மை செய்பவர்கள், தங்களின் ஊதியத்தை அதிகப்படுத்துவது, வியாபாரத்தை விரிவாக்குவது, நிறுவனத்தின் சொத்து மதிப்பை உயர்த்துவது என்ற நோக்கங்களை கொண்டு இருக்கலாம் என்பதை வலியுறுத்துகின்றன.













FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x