Last Updated : 07 Jul, 2016 09:52 AM

 

Published : 07 Jul 2016 09:52 AM
Last Updated : 07 Jul 2016 09:52 AM

இந்தியாவின் 7.5 சதவீத வளர்ச்சி மிகைப்படுத்தப்பட்ட தகவல்: அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கருத்து

இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) 7.5 சதவீத அளவுக்கு இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது மிகைப்படுத்தப்பட்ட வளர்ச்சி என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் நரேந்திர மோடி தலைமையில அரசு மிகவும் மெதுவாக செயல்படுவதாகக் குறிப் பிட்டுள்ளது. அதிகார வர்க்கத் தினரின் குறுக்கீடுகளைத் தடுப்பது மற்றும் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் அது பாராட்டியுள்ளது.

பொருளாதார சீர்திருத் தங்கள் அதிக அளவில் மேற் கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக அதிகாரிகள் நிலையில் முடிவுகளை எடுப்பதிலும், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதிலும் ஒழுங்குமுறை கொண்டு வரப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

அரசு கொண்டு வந்த சீர்திருத் தங்கள் பலவற்றை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் கடுமையாக போராட வேண்டியிருந்தது என்று ‘2016-ம் ஆண்டு முதலீட்டு சூழல்’ குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகள் குறித்து தெளிவான முடிவுகளை எடுக்க முடியாத சூழல் நிலவியது.

போதிய ஆதரவு இல்லை

நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டத்தை நிறை வேற்ற அரசுக்கு போதிய ஆதரவு நாடாளுமன்றத்தில் கிடைக்க வில்லை. அதேபோல சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோ தாவை நிறைவேற்ற இன்னமும் எதிர்க்கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக் கிறது. இன்னமும் இதில் முடிவு எட்டப்படவில்லை. ஒருவேளை இந்த வரிச் சீர்திருத்த மசோதா நிறைவேறினால் அது இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.

உலகில் விரைவான வளர்ச் சியை எட்டிவரும் நாடுகளில் இந்தி யாவும் ஒன்று. இருப்பினும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக 7.5 சதவீத வளர்ச்சியை இந்தியா எட்டும் என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட அளவீடாகும். இந்த அறிக்கையை வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்கள் துறை தயாரித்துள்ளது.

விதிமுறைகளை அமல்படுத்து வதில் போதிய சூழல் இல்லாதது, வரி விதிப்பு, கட்டுப்பாட்டுக் கொள் கைகளில் உறுதியற்ற நிலை, கட்டமைப்பு வசதிகளில் காணப் படும் குறைபாடுகள், உள்ளூரில் பொருள்கள் கிடைப்பதில் நிலவும் தட்டுப்பாடு, பல்வேறு சேவைத்துறைகளில் நிலவும் கட்டுப்படாடு, பெரும்பாலான பகுதிகளில் நிலவும் மின் தட்டுப்பாடு உள்ளிட்டவை இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் அம்சங்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய்

இத்தனை பிரச்சினைகளுக்கும் இடையில் வளர்ச்சிக்கு சாதகமான ஒரே அம்சம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறை வாக இருப்பதாகும். சர்வதேச பொருளாதார சூழலில் இது இந்தியாவுக்கு சாதகமான அம்ச மாகும். இருப்பினும் நிதி அமைச் சகம் அடுத்த ஆண்டில் வளர்ச்சியை சற்றே குறைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் மிகுந்த திருப்புமுனையாக இருந்தது. சிறுபான்மை அரசு என்ற நிலை மாறியது. இதனாலேயே முந்தைய அரசால் பெருமளவிலான பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வர முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் ரகுராம் ராஜன் கொண்டு வந்த சில நிதிக் கொள்கை சீர்திருத்தங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது என்று அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் இன்னும் சில சவால்கள் உள்ள போதிலும், இந்தியாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இவை நீண்ட கால அடிப்படையில் திட்டங்களை வகுக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவின் கட்ட மைப்புத் துறையில் 1 லட்சம் கோடி டாலருக்கு மேல் முதலீடு அடுத்த 7 ஆண்டுகளுக்குத் தேவைப்படு கிறது. இதில் அமெரிக்க நிறுவ னங்கள் பங்கேற்கலாம். இது அமெரிக்க நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாகும். இருந்தாலும் இதற்குரிய நிதிச் சூழல் மேம்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி

கடந்த ஆண்டு 100 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இது இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் மிகச் சிறந்த வாய்ப்பாகும். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு வசதி, பொறியியல் துறை ஆகியன சர்வதேச அளவில் சிறப்பாக உள்ளன.

இருப்பினும் 2010-11-ம் ஆண்டுகளில் பெரிய அளவில் நிகழ்ந்த ஊழல், லஞ்ச குற்றச்சாட்டுகள் இந்தியாவின் மீதான அபிப்ராயத்தை சர்வதேச அளவில் சீர்குலைத்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x