

அன்னிய நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ) மற்றும் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்(எஃப்.ஐ.ஐ.) என்ற இரு பிரிவில் குழப்பம் இருந்துகொண்டே இருக்கிறது. இது குறித்து ஒரு தெளிவான முடிவை எடுக்க பொருளாதார விவகாரங்களுக்காக செயலாளர் அர்விந்த் மாயாராம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு அக்டோபர் 15-ம் தேதிக்கு பிறகு சந்தித்து, இம்மாத இறுதிக்குள் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்க இருப்பதாக மத்திய அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் சர்வதேச விதிமுறைகள் கையாளப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். கூடுதலாக, ஒரு நிறுவனத்தில் 10 சதவிகிதத்துக்குகீழ் அன்னிய முதலீடு இருக்கும் பட்சத்தில் அதை அன்னிய நிறுவன முதலீட்டாளராகவும் (எஃப்.ஐ.ஐ.) 10 சதவிகிதத்துக்கு மேல் இருக்கும்போது அதை அன்னிய நேரடி முதலீடாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்ற கொள்கையையும் கடந்த பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார்.