Last Updated : 14 Nov, 2013 12:00 AM

 

Published : 14 Nov 2013 12:00 AM
Last Updated : 14 Nov 2013 12:00 AM

மதிப்பீட்டு நிறுவனங்களின் அவசியம் என்ன?

குறிப்பிட்ட கால இடைவெளியில் சில அரசுகளே, கடன் மதிப்பீடு நிறுவனங்களுக்கு தங்கள் நாட்டில் நிலவும் தொழில், நிதி, பணக் கொள்கை மற்றும் அது தொடர்பான மாற்றங்கள் குறித்து நேரிடையாக அறிவிக்கின்றன. இதில் இருந்து கடன் மதிப்பீடு நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணரலாம்.

சிலகாலமாக 'ரேட்டிங் ஏஜென்சி' களை பற்றிய செய்திகள் அதிகம் நமக்கு தெரியவருகிறது. சமீபத்தில் கூட அமெரிக்காவின் கடன் மதிப்பீடு அமைப்பான மூடி (Moody’s Analytics), 2013-ன் முதல் பாதியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5-6 சதவீதத்தை ஒட்டியே இருக்கும் என கூறியது. மேலும் கடந்த இரண்டு வருடங்களில் இந்தியாவின் வளர்ச்சி வேகம் குறைந்து வருவதாகவும் தெரிவித்தது.

மற்றொரு நிறுவனமான ’கோல்ட்மேன் சாக்ஸ்’ பங்குச்சந்தை மீதான கண்ணோட்டத்தை உயர்த்தி சொல்லி இருக்கிறது. 2014-ம் ஆண்டின் இறுதிவாக்கில் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 6900 புள்ளிகளாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறது.

மேலும், எதிர்வரும் நாடாளு மன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழும் என்பதை காரணமாக சொல்லியுள்ளது. பாஜக வின் பிரதமர் வேட்பாளர் தொழில்துறையின ருக்கு சாதகமனவர், மாற்றத்தை விரும்புபவர் என்ற எண்ணம் பங்கு முதலீட்டளர்கள் மத்தியில் நிலவுகிறது என்றும் தெரிவிக்கிறது இந்த மதிப்பீட்டு நிறுவனம்.

திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா மற்றும் மத்திய அமைச்சர் ஆனந்த் ஷர்மா மற்றும் பலர் அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் மதிப்பீட்டு நிறுவனங்கள் கருத்து கூற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்கள். (இதற்கு செவி சாய்க்கப் போவது இல்லை என்று அந்த அமைப்பு கூறிவிட்டது)

மத்திய அமைச்சர் மற்றும் திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஏன் ஒரு தனி அமைப்புக்கு பதில் அளிக்க வேண்டும்? இதற்கு காரணம் இருக்கிறது.

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான சாலை, போக்குவரத்து, மின் ஆற்றல், போன்ற சிலவற்றை உடனடியாக செய்திட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலதனம் அவசியம். குறிப்பாக நம் நாட்டில் அதற்கான தேவை வேகமாக வளர்ந்து வருகிறது.

நம் போன்ற கோடிக்கணக்கான தனிநபர்களின் சேமிப்பை மூலதனமாக வைத்துதான் நம் நாட்டின் நிதி அமைப்புகளான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. நம்முடைய சேமிப்புக்கு அவை வட்டி கொடுத்தாக வேண்டும். அதே சமயத்தில் சரியான தொழிலை அடையாளம் கண்டு முதலீடு செய்யவேண்டும்.

திட்டங்களை செயல்படுத்த உள்நாட்டு மூலதனம் மட்டும் போதாது. மேற்கொண்டு எழும் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிநாட்டில் இருந்து மூல தனத்தை திரட்ட வேண்டியது அவசியம் ஆகிறது.

வெளிநாட்டு முத லீட்டார்கள் ஒரு குறிப் பிட்ட நாட்டின் அரசி யல் பொருளாதார சூழலை கவனிக் காமல் அந்த நாட்டில் முதலீடு செய்ய முன் வர மாட்டார்கள். முத லீடுக்கு மாறான சூழல் ஒரு நாட்டில் நிலவும் பட்சத்தில் எதிர்கால முதலீடுகள் பாதிக்கப்படும்.

மேற்கண்ட அரசியல் பொருளாதார சூழலில், மூலதனம் வைத்திருப்பவரும் (lakhs and lakhs of individual savers and others) அதைத் திரட்டுபவரும் (financial / investing agencies) அதை அனுமதிப்பவரும் (Government and regulatory bodies) ஒரு புள்ளியில் சந்தித்து அவரவர்க்கு வேண்டிய அத்தியாவசிய தகவலை பெறும் ஒரு அமைப்புதான் கடன் மதிப்பீட்டு அமைப்புகள் (credit rating agencies).

அவைகள் தன்னிச்சையான அமைப்பாக செயல்படுகின்றன. இந்தியாவை மையமாகக் கொண்டு உலகின் முக்கிய மையங்களில் செயல்படும் இந்திய மதிப்பீடு அமைப்புகள் குறிப்பிடத்தகுந்த பெயர் பெற்றுள்ளன என்பதில் இருந்து இந்த அமைப்புகளின் முக்கியத்தை புரிந்து கொள்ளலாம்.

கடன் மதிப்பீட்டு அமைப்புக்கள் ஒரு குறிப்பிட்ட நாட்டைப் பொறுத்த அளவில், அந்த நாட்டில் நிலவி வரும் அரசியல், பொருளாதார, நிதி இயல் மற்றும் அயல் நாடுகளுடனான உறவு ஆகியவை தொடர்பான சூழலை மதிப்பீடு செய்கின்றன. மேலும், வணிக நிறுவனங்களை அவற்றின் சொத்தின் தரம், நிர்வாக அமைப்பின் தரம், தொழிலின் வளர்ச்சி, லாப நட்டக் கணக்கு ஆகியவை கொண்டு தரவரிசைப் படுத்துகின்றன.

இதை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கடன் மதிப்பீட்டு நிறு வனங்கள் தொடர்ச்சி யாக செய்துகொண்டு வருகின்றன. இந்த மதிப்பீடுகளைக் கொண்டு அந்தந்த துறை சார்ந்த நிறுவனங் களை ஒப்பிட்டுப் பார்த்து முதலீடு செய்வது சாத்திய மாகிறது.

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சில அரசுகளே, கடன் மதிப்பீட்டு நிறுவனங்களுக்கு தங்களது நாட்டில் நிலவும் தொழில், நிதி, பணக் கொள்கை மற்றும் அது தொடர்பான மாற்றங்கள் குறித்து நேரிடையாக அறிவிக்கின்றன. இதில் இருந்து கடன் மதிப்பீட்டு நிறுவனங்களின் முக்கியத்துவத்தை உணரலாம்.

ஆக, முதல் வைத்து இருப்ப வருக்கு (savers) வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாடு, தொழில் செய்பவ ருக்கு அதில் உள்ள போட்டி நிறுவனங்கள் பற்றிய ஒப்பீடு, ஆட்சி செய்வோருக்கு தன் நாட்டின் முதலீட்டு சுழல் தரம் பற்றி ஒப்பிட்டு, ஆகியவை குறித்து அறிய கடன் மதிப்பீட்டு அமைப்புக்கள் உதவுகின்றன.

கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் குறித்த மாற்று கருத்துக்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அதையும் தாண்டி அவைகளின் பயன்பாட்டு அவசியம் உணரப்பட்டு இருக்கிறது.

பேராசிரியர் ரவி இளங்கோவன், தொடர்புக்கு - raviircdm@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x